பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

பிள்ளைத்தமிழ், கடம்பர்கோயில் உலா, சங்கரநயினார் கோயில் அந்தாதி, கலைசைக் கோவை, பெருந்தொகை, சூடிக் கொடுத்த நாய்ச்சியார் தோத்திரப் பாமாலை, சிராமலைக் கோவை, மத்யமவியாயோகம், அமிர்தரஜ்ஜனி, திருமுரு காற்றுப்படை, பொன்வண்ணத்தந்தாதி போன்ற சுவடிப் பதிப்புகளையும்; கரந்தைத் தமிழ்ச்சங்கம் நெல்லை வருக்கக் கோவை, சித்தரந்தாதி, தொல்காப்பியம்-பொதுப்பாயிரம், கச்சிக் கலம்பகம், பரத சாத்திரம், தமிழரசி குறவஞ்சி, தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை போன்ற சுவடிப்பதிப்புகளையும்; கோவைத் தமிழ்ச் சங்கம் சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் விளக்கவுரையுடன் பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் பல தொகுதிகள் மற்றும் சேரவேந்தர் செய்யுட்கோவை ஆகிய சுவடிப்பதிப்புகளையும் வெளியிட்டுள்ளன.

-

இப்பணிகளோடு பருவ இதழ் வெளியீட்டுப் பணியும் நிகழ்ந்திருக்கின்றன. மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் 'செந்தமிழ்' தஞ்சைத் தமிழ்ச்சங்கத்தின் 'தமிழகம், கோவைத் தமிழ்ச் சங்கத்தின் ‘கொங்குமலர்' மற்றும் நூலிதழ்களான பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம், சேரவேந்தர் செய்யுட் கோவை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 'தமிழ்ப்பொழில்", சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் 'தமிழ்த்தாய்', மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் 'சங்கச் செய்தி', பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் காவேரி - ஊற்று", பெர்லின் தமிழ்ச் சங்கத்தின் 'தமிழன் குரல்' போன்ற தமிழ்ச்சங்கப் பருவ இதழ்களைக் குறிப்பிடலாம். இவற்றில் செந்தமிழ் (1902), தமிழ்ப்பொழில் (1925), கொங்குமலர் (1934) ஆகிய தமிழ்ச் சங்கப் பருவ இதழ்கள் சுவடிப்பதிப்புகளை வெளியிட்டுள்ளன. கூடிப்பதிப்புகளை வெளியிட்ட தமிழ்ச் சங்கப் பருவ இதழ்கரில் கொங்குமலர் தவிர ஏனைய இரண்டும் இன்று வரை தொடர்ந்து வெளிவந்துகொண்டு இருக்கின்றன.

செந்தமிழ்

பாண்டித்துரைத் தேவரால் கி.பி.1901ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவப்பெற்றது. இதுவே