பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

65

இப்போதுள்ள 'மதுரைத் தமிழ்ச் சங்கம்' ஆகும். இச்சங்கத் திற்கென 1902ஆம் ஆண்டு 'செந்தமிழ்' எனும் திங்களிதழ் ஒன்று உருவாக்கப்பெற்றது. 1-11 தொகுதிகளுக்கு மு. இராக வையங்காரும், 12-48 தொகுதிகளுக்குத் திரு. நாராய ணையங்காரும், 49-51 தொகுதிகளுக்குத் திருவாளர் நா. அப்ப ணையங்காரும் பத்திராசிரியர்களாகப் பணியாற்றி யுள்ளனர். இவர்களுக்குப் பிறகு சங்க நிர்வாக ஆசிரியர் பி.டி. இராசனும், அவருக்குப் பிறகு சங்கச் செயலாளர், தலைவர் மற்றும் துணைத் தலைவர் போன்றோரும் பத்திராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

இவ்விதழில் தமிழிலக்கிய இலக்கணம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், அச்சிடப்பெறாத பழந்தமிழ் நூல்கள், தமிழ்நாட்டு வரலாறு மற்றும் தமிழ்ப் புலவர்கள் வரலாறு, ஆவணங்கள், ஆங்கிலம் & சமஸ்கிருத மொழிபெயர்ப்புகள், தமிழ் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் தேவையான கருத்துகள் போன்றன வெளிவந்துள்ளன. இதனை இவ்விதழாசிரியர், "இது, பெரும்பான்மையும் தமிழிலக்கிய இலக்கண விஷயங்களும், புராதன சரிதங்களும், சாஸனங்களும், வடமொழியினும் ஆங்கிலத்தினுள் தமிழிற்கு வேண்டுவனவாகக் கருதப்படும் நூன்மொழி பெயர்ப்புகளும் ஒன்றையொன்றிகழாச் சமயக் கொள்கைகளும், தமிழின் அருமை பெருமையடங்கிய விஷயங்களும், தமிழ் வளர்ச்சிக்கு வேண்டுவன பிறவும் கொண்டு நடைபெறுகின்றது. இப்பத்திரிகை மூலம் வெளிவரும் செந்தமிழ் நூல்கள், தனித்தனி புத்தகங்களாதற்கு உரிய நிலையில் அச்சிடலாகும்" (செந்தமிழ், 2:6:1904, ப.4) என்றார். இந்நோக்கங்களிலிருந்து வழுவாமல் திருவாளர் நா. அப்பணையங்காரின் காலம் வரை செயலாற்றி வந்துள்ள செந்தமிழ் இதழ், பிறகு அதன் போக்கில் பெரும்மாற்றம் தெரிகின்றது.

இவ்விதழிற்குத் தொடக்க காலத்தில் கட்டுரை எழுதிய அறிஞர்களில் சோழவந்தான் அரசஞ் சண்முகம்பிள்ளை, வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி, யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்