பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

பிள்ளை, உ.வே. சாமிநாதையர், சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், அ. மாதவையர், வை.மு.சடகோபராமாநுஜாச்சாரியார், தி. செல்வக்கேசவராய முதலியார், எம்.கே.எம். அப்துல் காதிரு ராவுத்தர், ஆ. முத்துத் தம்பி பிள்ளை,எம். ஜோசப்டையஸ் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர்.

செந்தமிழ் இதழில் அகப்பொருள் விளக்கம் மூலமும் உரையும், அகராதி நிகண்டு, அசதிக்கோவை, அட்டாங்க யோகக்குறள், அம்பிகை நவமணிமாலை, அரும்பொருள் விளக்க நிகண்டு, அருவியன் காதை, ஆசிரியமாலைச் செய்யுட்கள், ஆழ்வார் பிள்ளைத்தமிழ், ஆன்மலிங்கமாலை, இரணியன் வதைப்பரணி, இராமசெயம் (இராமாயணத் திருப்புகழ்), இராஜராஜ தேவருலா, இலக்கண தீபம், இனியது நாற்பது உரையுடன், உவமான சங்கிரகம் - 1, உவமான சங்கிரகம் -2, எதிராசரந்தாதி, ஐந்திணையெழுபது உரையுடன், ஐந்திணையைம்பது உரையுடன், கடம்பர்கோயில் உலா, கம்பராமாயணக் கௌஸ்துபம், கரவைவேலன் கோவை, கலசைக் கோவை, கனா நூல், காழியந்தாதி, கீழ்வேளூர் உலா, குருகைமான்மியம் - 1, குருகைமான்மியம்-2, குருபரம்பரை, கூடற்புராணம், சங்கரசோழனுலா, சங்கரநயினார் கோயில் அந்தாதி, சதுரங்க நூல், சிதம்பரப் பாட்டியல் உரையுடன், சிராமலைக்கோவை, சிறைவிடந்தாதி, சோடசகலா பிராசாத யோகம், சோடசகலா பிராசாத விருத்தம், சௌமிய நாராயணப் பெருமாள் திருநாள் வாகனக்கவி, தண்டலையார் சதகம், தருக்க சூத்திரம், தளசிங்க மாலை, தளவாய் ரெகுநாத சேதுபதியவர்கள் மீது வண்ணம், திணைமாலை நூற்றைம்பது, திருக்கயிலாய ஞான உலா, திருக்கலம்பகம் மூலமும் உரையும், திருக்குருகூர்த் திருப்பணிமாலை, திருக்குறுங்குடி அழகியநம்பி பிள்ளைத்தமிழ், திருக்குற்றால் ஊடற்பிரபந்தம், திருக்குற்றால மாலை, திருச்சிறுபுலியூர் உலா, திருச்செந்திற் கலம்பகம், திருச்செந்தூர்ப்பரணி, திருஞானசம்பந்த சுவாமிகள் பிள்ளைத்தமிழ், திருத்தணிகைத் திருவிருத்தம், திருத்தொட்டிக்