பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

67

கலைக் கேசவப்பெருமாள் வண்ணம், திருநறையூர் நம்பி மேகவிடுதூது, திருநூற்றந்தாதி மூலமும் உரையும், திருப்பணி மாலை, திருப்பதிக்கோவை, திருப்புல்லாணிச் செகநாதர் பேரில் ஊசல்-வண்ணம் - விண்ணப்பம் - சிந்து, திருப்புல்லாணி நொண்டி நாடகம், திருப்புல்லாணி பதுமாசனித் தாயார் பேரில் ஊசல், திருமாலிருஞ்சோலைமலை அழகர் பிள்ளைத்தமிழ், திருமுருகாற்றுப்படை உரையாசிரியருரை, திருவாரூருலா, திருவாரூர் இரட்டைமணிமாலை, தேவையுலா, தொட்டிக்கலைச் கேசவப்பெருமாள் இரட்டைமணிமாலை, தொல்காப்பியம் - பொருளதிகாரம் -செய்யுளியல் நச்சினார்க் கினியர் உரை, நந்திக்கலம்பகம், நம்மாழ்வார் வண்ணம், நரி விருத்தம், நாலடியார் திருத்தவுரை, நான்மணிக்கடிகை பழைய உரை, நுண்பொருண் மாலை, நேமிநாதம், பதிபசுபாசத் தொகை, பழமொழி மூலமும் உரையும், பழனிக்கோவை, பழனிப் பிள்ளைத்தமிழ், பன்னிருபாட்டியல், பாண்டி மண்டல சதகம், பாப்பாவினம், பிரபந்த தீபிகை, பிராசாத அகவல், பிராசாத தீபம், பிராசாத மாலை, புரூரவ சரிதை, புலவராற்றுப்படை, புல்லையந்தாதி, பெருந்தொகை, பெரும்பொருள் விளக்கப் பாடல்கள், பொருட்டொகை நிகண்டு, பொன்வண்ணத்தந்தாதி, மதுரை மும்மணிக்கோவை, மாறனகப்பொருளும் திருப்பதிக் கோவையும், மாறனலங்காரம், மிழலைச் சதகம், முத்திரை, முத்தொள்ளாயிரச் செய்யுட்கள், ராம சரிதப்பாட்டு, வருத்தமறவுய்யும் வழி, வளையாபதிச் செய்யுட்கள், விக்கிரம சோழனுலா ஆகிய 109 சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தனி நூலாக்கம் பெற்றிருக்கின்றன.

செந்தமிழ் தொடங்கிய நாள் தொட்டு இன்று வரை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது. என்றாலும், இடையிடையே சில திங்கள்கள், சில ஆண்டுகள் வெளிவர வில்லை. பல இதழ்கள் இணைந்த பகுதிகளாகவும் வெளிவந்து உள்ளன. நவம்பர் 1938 -அக்டோபர் 1939 மற்றும் நவம்பர் 1948 - அக்டோபர் 1949 ஆகிய இரண்டு ஆண்டுகளும்,