பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

தொகுதி 58:11-12, 61:4-5. 65:1-2.66:1, 69:2-3 ஆகிய இதழ்ப் பகுதிகள் வெளிவரவில்லை.

w

10:10-12; 15:7-9; 39:4-5 & 11-12; 41:6-8 & 9-12; 42:8- 9 & 10-12; 43:1-2, 4-5 & 10-11; 44:1-2, 4-5, 7-8 & 10-11; 45:5-6, 7-8, 9-10 & 11-12; 46:4-5, 6-7, 8-9 & 10-12; 47:2-3, 4-5, 6-7, 8-9 & 10-12; 48:1-2, 3-4, 5-6, 7-8, 9-10 & 11-12; 49:1-2, 3-4, 5-6, 7-8 & 9-10; 57:11-12; 59:1-2, 3-5, 6-8 & 9- 12; 60:1-2, 3-4, 5-6, 7-9 & 10-12; 61:1-2 & 7-8; 73:3-4 பகுதிகள் இணைந்த இதழ்களாக வெளிவந்திருக்கின்றன. 59ஆம் தொகுதி முதல் காலாண்டிதழாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. திங்களிதழாக வெளிவந்த முதல் 58 தொகுதிகளுக்குள் மட்டுமே சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப்பொழில்

'கரந்தைத் தமிழ்ச்சங்கம்' உயர்திரு த.வே. இராதாகிருட்டின பிள்ளையால் 14.5.1911ஆம் ஆண்டு தஞ்சைக்கருகே கருந்தட்டாங்குடி என்னும் கரந்தையில் தோற்றுவிக்கப்பெற்றது. சங்கத்திற்கென்று தனியே ஓர் இதழ் வெளியிட எண்ணி 1913ஆம் ஆண்டு 'தமிழவேள் தமிழ்மொழி' தொடங்கப்பெற்றது. ஆயினும் இது தொடர்ந்து வெளிவரவில்லை. 1914ஆம் ஆண்டில் மீண்டும் இதழ் தொடங்கத் திட்டமிட்டு 1925ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் 'தமிழ்ப்பொழில்' தோன்றியது. கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளை இவ்விதழின் முதல் ஆசிரியராவார். திங்களிதழாகத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது.

தமிழ்ப்பொழில் தொடங்கி நாற்பதாண்டுகள் வரை (1966 ஏப்ரல் வரை) இடையறவின்றி வெளிவந்துள்ளது. பின்னர் மே 1966 முதல் ஏப்ரல் 1968 வரை வெளிவரவில்லை. மீண்டும் தமிழ்ப்பொழில் தலையெடுத்துத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்றாலும் சில தொய்வுகளும் ஏற்பட்டுள்ளன. துணர்கள் 9-19, 25-28, 32-37, 45-49, 54