பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

69

ஆகியன மட்டும் தனித்தனி மலர்களைக் கொண்டிருந்தன. இடையில் வெளிவந்த துணர்களில் மலர்கள் இரண்டோ மூன்றோ இணைந்து ஒரு தனியிதழாக வெளிவந்துள்ளன. துணர் 55, மலர் 4லிருந்து தொடர்ந்து திங்களுக்கொன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றது.

கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, திருவாளர்கள் எல். உலகநாத பிள்ளை, நீ. கந்தசாமிப் பிள்ளை, ஐ. குமாரசாமிப் பிள்ளை, கோ.சி. பெரியசாமிப் புலவர், அ. கணபதிப் பிள்ளை, ச. சுயம்பிரகாசம், செ. தனக்கோடி, அரங்க வே.சுப்பிரமணியன் ஆகியோர் பொழிற்றொண்டராய் விளங்கினர். பொழிலின் 22 துணர்களில் தமிழறிஞர்களே பொழிற்றொண்டர்களராக இருந்துள்ளனர். பின்னர் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர், அமைச்சர் போன்றோரும் பொழிற் றொண்டர்களாக இருந்திருக்கின்றனர். 1983ஆம் ஆண்டு முதல் பாவலரேறு ச. பாலசுந்தரனார் அவர்கள் பொழிற்றொண்ட ராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இவ்விதழில் தமிழ் வளர்ச்சி, தமிழர் மேம்பாடு பற்றிய கட்டுரைகள் அதிகம் வெளிவந்துள்ளன. சிறப்பாகத் தமிழ் மொழி வரலாறு, சொல்லாக்கம், மொழிபெயர்ப்புகள், தமிழ் நூல் ஆராய்ச்சி, ஆய்வுக் கட்டுரைகள், நிகழ்கால ஆசிரியர்தம் நூல்கள், பழந்தமிழ் நூல்கள், அரிய நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள், தமிழ்த் தனிச் செய்யுள்கள், தமிழ்நல் மதிப்புரைகள், தமிழ்ச்சங்கச் செய்திகள் போன்றன வெளிவந்து உள்ளன.

தமிழ்ப்பொழிலில் உதயகுமார காவியம், கருந்திட்டைக் குடிப் பதிகம், குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், சித்தரந்தாதி, சிராமலையந்தாதி, சுவாமிநாதம், தத்துவ விளக்கம், தியாகராசர் பள்ளேசல், திருமலை வெண்பா,தில்லையுலா, நெல்லை வருக்கக் கோவை, பட்டமதன வித்தார மாலை, பதிபசுபாசத் தொகை,பதிபசுபாசப் பனுவல், பதிபசுபாச வகை, பரத சாத்திரம், பரமோபதேசம், பழைய பாடற்றிரட்டு, புலவர் பிணைபோன வரலாறு, வசந்தன் உயிர்வரு படலம் ஆகிய இருபது சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.