பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

கொங்குமலர்

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு முன்னரே கோவைத் தமிழ்ச்சங்கம் தோன்றியதாகத் தெரிகிறது. என்றாலும் செயற்பாடுகள் எல்லாம் கோவை எல்லைக்குள்ளேயே இருந்திருக்கின்றன. திருவாளர்கள் சி.எம். இராமச்சந்திர செட்டியார், சி.கே. சுப்பிரமணிய முதலியார் ஆகியோரின் முயற்சியால் கோவைத் தமிழ்ச்சங்கம் உலகிற்கு அறிமுகமாகி இருக்கின்றது. சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியாரை ஆசிரிய ராகக் கொண்டு கோவைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1934ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதல் 'கொங்குமலர்' எனும் திங்களிதழ் தோற்றுவிக்கப்பெற்றிருக்கின்றது.

"கொங்கு மலர் ஆறு பகுதிகளைக் கொண்டது. அதாவது, செய்யுள் பகுதி, சரிதப் பகுதி, கலைப் பகுதி, சமயப் பகுதி, ஆராய்ச்சிப் பகுதி, ஒழிபு ஆகும். மூன்றாம் மலரி லிருந்து ஒழிபு என்னும் பகுதியில் இனிமேல் நாட்டு நடப்பு, திங்கள் விசேஷங்கள், கல்வி சம்பந்தமான பிரகடனங்கள் இவை வரும். முக்கியமாகக் கொங்கு நாட்டில் நடைபெறும் உற்ச வாதிகள் குறிக்கப்பெறும். உபாத்தியாயர்களுக்கு அனுகூலமான செய்திகள் பிரசுரிக்கப்பெறும். வாரந்தோறும் (திங்கள்) ஒரு கதை அல்லது இரண்டு கதைகள் எழுதப்பெறும். இன்னமும் பொது ஜனங்களுக்கு அனுகூலமான பல கட்டுரைகள் வெளிவரும் (கொங்கு மலர், மலர் 3,1936, ப.2) என்பதால் கொங்கு மலரின் நோக்கம் புலப்படும். இம்மலர், தொடர் எண் பெற்று வெளிவந்துள்ளது.

இவ்விதழில் ஆனந்தரங்கன் கோவை, தென்சேரி மாலை ஆகிய இரண்டு குறைச்சுவடிப்பதிப்புகள் வெளிவந்து இருக்கின்றன. இவ்விதழ் நான்கு மலரோடு நின்றுள்ளது. 3. சுவடிநூலகப் பருவ இதழ்கள்

சுவடி நூலகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றில் உலகெங்கும் பழந்தமிழ்ச் சுவடிகள் பாதுகாக்கப்பெற்று