பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

71

வருகின்றன. தனியார் பலரிடமும் பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சுவடிகள் இருப்பதாக அறியமுடிகிறது. "ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாண்ட், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், பெல்ஜியம், ருமேனியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஸ்வீடன், பின்லாந்து, ஸ்பெயின், நார்வே, செக்கோஸ்லாவாகியா, போலந்து போன்ற பல நாடுகளிலும் தமிழ்ச்சுவடிகள் இருப்பதை அறியமுடிகிறது. பிரிட்டனில் மட்டும் இலண்டன், ஆக்ஸ்போர்டு, மான்செஸ்டர், கேம்பிரிட்ச், எடின்பரோ, கிளாசுகோ முதலிய இடங்களில் நானூற்றிற்கும் மேற்பட்ட தமிழ்ச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன" (வே.இரா. மாதவன், சுவடிப் பதிப்பியல், ப.211).

இதேபோல் இந்தியாவில் கொல்கத்தா தேசிய நூலகம்,

திருவனந்தபுரம் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், மதுரைத் தமிழ்ச் சங்கம், திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம், அடையாறு நூலகம், மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே: சாமிநாத ஐயர் நூல் நிலையம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, ஈரோடு கலைமகள் கல்வி நிலையம், சென்னை -உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், பிரெஞ்சிந்திய நிறுவனம், திருவாவடுதுறை ஆதீனம், சிதம்பரம் ஸ்ரீமௌன சுவாமிகள் திருமடம், சென்னை ஆசியவியல் நிறுவனம், தஞ்சை சரஸ்வதிமகால் நூலகம் போன்ற இடங்களில் தமிழ்ச் சுவடிகள் இருக்கின்றன. இவற்றில் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், தஞ்சை சரஸ்வதிமகால் நூலகம், மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறைச் சுவடிகள் நூலகம் போன்றவை தமிழகச் சுவடி நூலகங்களாகும். இந்நூலகங்கள் சுவடிப்பதிப்புப் பணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பல சுவடிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளன.