பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

தஞ்சை சரஸ்வதிமகால் நூலகம் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி ஆகிய மொழிகளில் இலக்கியம், இலக்கணம், புராணம், கதைப்பாடல், தத்துவம், அறிவியல், வரலாறு, மருத்துவம், சோதிடம், இசை, நாடகம், பழங்கணக்கு போன்ற பொருண்மைகளில் நூல்களையும், இந்நூலகச் சுவடிகளின் அட்டவணைகளையும் சேர்த்து இதுவரை 400க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது.

சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், அரபி, பாரசீகம், கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சோதிடம், இசை, நாடகம், வானவியல், மருத்துவம், அறிவியல், தத்துவம், பழங்கணக்கு போன்ற பொருண்மைகளில் நூல்களையும்,இந்நூலகச் சுவடிகளின் அட்டவணைகளையும் சேர்த்து இதுவரை 350க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு உள்ளது.

மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் நூலகம் தமிழ்மொழியில் மட்டும் இலக்கியம், இலக்கணம், புராணம், வாழ்க்கை வரலாறு, கட்டுரைத் தொகுப்பு போன்ற பொருண்மைகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை இலக்கியம், இலக்கணம், மருத்துவம் போன்ற பொருண்மைகளில் நூல்களையும்,இந்நூலகச் சுவடிகள் விளக்க அட்டவணைகள் மற்றும் அனைத்துலகத் தமிழ் ஓலைச்சுவடிகளின் அட்ட வணைகள் ஆகியவற்றையும் சேர்த்து இதுவரை 50க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது.

இத்தனிநிலைச் சுவடிப்பதிப்புக்களுடன் தமிழ்ச் சுவடி நூலகங்கள் பருவ இதழ்ச் சுவடிப்பதிப்புகளையும் வெளியிட்டு உள்ளன. இவ்வகையில் சரஸ்வதிமகால் நூலகத்தின் The Joumal of the Tanjore Maharaja Serfoji's Saraswathi Mahal Library, சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தின் Bulletin of the Gov- emment Oriental Manuscripts Library, Madras ஆகிய பருவ இதழ்கள்