பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

73

இடம்பெறுகின்றன. இவ்விரு இதழ்களைத் தமிழில் சரஸ்வதி மகால் நூலகப் பருவ இதழ் என்றும், சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழ் என்றும் முறையே குறிப்பிடுவர்.

சரஸ்வதிமகால் நூலகப் பருவ இதழ்

தஞ்சைப் பகுதியை மராட்டிய மன்னர்கள் கி.பி. 1676 முதல் 1855ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து வந்தனர். அம்மன்னர்களால் தொகுக்கப் பெற்றனவும், படியெடுக்கப் பெற்றனவும், விலைக்கு வாங்கியனவும், நன்கொடையாகப் பெறப்பட்டனவும் ஆகிய பல்வேறு வகையான சுவடிகளுடன் சரஸ்வதிமகால் நூலகம் தஞ்சையில் அமைந்துள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிநூல் சுவடிகளும் கலைநூல் சுவடிகளும் பல்லாயிரக் கணக்கில் இருக்கின்றன.

இந்நூலகத்தின் தனிநூல் பதிப்பு முயற்சி கி.பி.1949ஆம் ஆண்டு தொடங்குகிறது. என்றாலும் கி.பி.1939ஆம் ஆண்டு 'சரஸ்வதிமகால் நூலகப் பருவ இதழ்' என்ற நாற்றிங்களிதழைத் தொடங்கியுள்ளது. இந்நூலகத்தின் அப்போதைய கௌரவ காரியதரிசியான திருவாளர் எஸ். கோபாலனின் மதிப்பூதியத்தை ஆதாரமாகக் கொண்டு இப்பருவ இதழ் தொடங்கப் பெற்று உள்ளது. 1939ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையி லான முதல் 39 தொகுதிகள் நாற்றிங்களிதழாகவும், 1991ஆம் ஆண்டு முதல் (40ஆம் தொகுதி முதல்) முத்திங்கள் இதழாகவும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

இவ்விதழின் பதிப்பாசிரியர்களாக இந்நூலகக் கௌரவக் காரியதரிசிகளும், நூலக இயக்குநர்களும், பதிப்புத்துறை மேலாளர்களும் இருந்துள்ளனர். இவ்விதழில் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் கட்டுரைகளும் பதிப்பு நூல்களும் வெளிவந்துள்ளன.

தமிழ்ச் சுவடிப்பதிப்புகள் வெளிவந்த பருவ இதழ்கள், தமிழ்ச் சுவடிப்பதிப்புகள் வெளிவராத பருவ இதழ்கள் எனப்