பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

பருவ இதழ்களின் காலத்தை இரண்டாகப் பகுத்துக் காணலாம். கி.பி.1953 - 1992 (தொகுதி 9-40) வரையிலான காலத்திலும், 1998-2000 (தொகுதி 44-46) வரையிலான காலத்திலும் தமிழ்ச் சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. 1939-1952 (தொகுதி (1-8) வரையிலான காலத்திலும், 1993-1997 (தொகுதி 41-43) வரையிலான காலத்திலும் தமிழ்ச் சுவடிப்பதிப்புகள் வெளிவரவில்லை. 1952 வரையுள்ள காலத்தில் சமஸ்கிருதமும் ஆங்கிலமும் முழுமையாக ஆட்கொண்டிருந்தன. ஆனால் இதற்கு மாறாக 1993-1997 வரையுள்ள காலத்தில் சமஸ்கிருதம் பற்றிய ஆய்வுகள் தமிழ்மொழியிலேயே வெளிவந் துள்ளன.

1939

-

--

இப்பருவ இதழில் கதிர்காம வேலவன் தோத்திரம், கந்தர் காதல், கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ், காஞ்சி மன்னன் அம்மானை, காத்தவராயன் சுவாமி பேரில் கும்மிப் பாடல், குயில் ராமாயணம், குருநாதபூபதி பேரில் அட்ட மங்கலம், குருக்ஷேத்திர மாலை, சட்டைநாதர் தோத்திரம், சரப புராணம், சிதம்பரச் செய்யுட்கோவை, சிவகாமி அம்மன் பேரில் அகவல், சிவபாரத சரித்திரம் - உரைநடை, சுந்தரர் சரித்திரச் சுருக்க அகவல், சுமிருதி சந்திரிகை உரைநடை, செட்டிச்சி யம்மாள் கதை, செந்தில் வேலவன் தோத்திரம், ஞானக் குறவஞ்சி, ஞானசாரம், ஞானவம்மானை, தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி, தத்துவவிளக்கம், திருச்செங்கோட் டகவல், திருச்சோற்றுத்துறை தலபுராணம், திருஞானசம்பந்த சுவாமிகள் பிள்ளைத்தமிழ், திருநாவுக்கரசு சுவாமிகள் சரித்திரச் சுருக்க அகவல், திருநெறி விளக்கம், திருவூடல், தேரூர்ந்த சோழன் கதை, நன்னாவூர் சங்கமேசுவரசுவாமி வேதநாயகி அம்மன் பேரில் விறலிவிடுதூது, நாசிகேது புராணம், பஞ்ச நதீசுரர் தோத்திரம், பட்டினத்தார் வெண்பா, பட்டினத்துப் பிள்ளை சரித்திரச் சுருக்க அகவல், பழனிமாலை, பழனி வேலவன் தோத்திரம், மகாமக அந்தாதிக் கும்மி, மன்னார் மோகனப் பள்ளு, மூதுரை (வாக்குண்டாம்), யாப்பருங்கலம், வருமுருகாற்றுப்படை, வலைவீசு புராணம், விசயராகவ நாயக்கர் அய்யன் பேரில் முளைப்பாட்டு, விபூதி தோத்திரம்,