பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

75

ஸ்ரீவீரபோக வசந்தராயர் வரலாறு ஆகிய 45 தமிழ்ச் சுவடிப் பதிப்புகள் வெளிவந்துள்ளன.

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழ்

திரு.காலின் மெக்கன்ஸி, டாக்டர் லெய்டன்,திரு. சி.பி. பிரௌன் ஆகியோரின் சுவடித் தொகுப்புகளையும், சென்னைக் கல்விச் சங்கத் தொகுப்புகளையும், சென்னை இலக்கியச் சங்கத் தொகுப்புகளையும் ஒன்றுகூட்டிக் கி.பி. 1869ஆம் ஆண்டு சென்னையில் ‘அரசினர் கீழைநாட்டுக் கையெழுத்து நூல் நிலையம்' உருவானது. இந்நூலகம் 1870ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரி நூலகத்துடன் இணைக்கப்பெற்றது. பின்னர் 1876ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக நூலகக் கட்டிடத்தில் தனித்து இயங்கி வருகின்றது.

.

இந்நூலகத்தில் முதல் பதிப்பு நூல் 1950ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. திருவாளர் தி. சந்திரசேகரன் அவர்கள் இந்நூலகக் காப்பாட்சியராக இருந்த காலத்தில்தான் அதிகமான நூல்கள் ஓலைச்சுவடிகளிலிருந்து பதிப்பாகி இருக்கின்றன. கி.பி. 1948ஆம் ஆண்டு முதல் இந்நூலகம் ‘அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழ்' எனும் அரையாண்டிதழ் வெளியிட்டு வருகின்றது.

1948ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை 21 தொகுதிகள் தொடர்ந்தும் இடையிடையே சில ஆண்டுகள் விடுபட்டும் வெளியாகியுள்ளதைக் காணமுடிகிறது. 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் 1995ஆம் ஆண்டு 22வது தொகுதி வெளிவந்துள்ளது. தொகுதி 21லிருந்து ஆண்டுக்கு ஒரு இணைந்த இதழாக வெளிவந்து கொண்டிருக் கின்றது. இதுவரை மொத்தம் 27 தொகுதிகள் (கி.பி.2000 வரை) 47 பகுதிகளில் வெளியாகியுள்ளன. இவ்விதழின் முதற் பதிப்பாசிரியர் திருவாளர் தி. சந்திரசேகரன் ஆவார். இவர் தொகுதி 1 முதல் 15:1 வரை பதிப்பாசிரியராக இருந்துள்ளார். தொகுதி 15:2க்குத் திருவாளர் ஏ.ஏ. இராமநாதன் அவர்களும்,