பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

தொகுதி 17:2, 18, 19:1க்குத் திருவாளர் ஆர்.கே. பார்த்தசாரதி அவர்களும், தொகுதி 21க்குத் திருவாளர் சி.ஆர். விட்டோபாபு அவர்களும், தொகுதி 22 முதல் 27 வரை முனைவர் எஸ். சௌந்தரபாண்டியன் அவர்களும் பதிப்பாசிரியர்களாக இருந்துள்ளனர்.

இப்பருவ இதழில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, அராபி ஆகிய மொழிகளில் சுவடிப்பதிப்புகள் வெளிவந்துள்ளன. இவற்றில் நூல்களைத் தவிர வேறெந்த செய்தியும் இடம்பெற்றில். ஒவ்வோர் இதழ்ப் பதிப்பிற்கு முன் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பதிப்பு நூலின் முன்னுரை சுருக்கமாக இடம்பெற்றுள்ளது.

இவ்விதழில் அருங்கலச் செப்பு, அலங்கார நூல், ஆத்திசூடித் திறவுகோல், ஆத்திசூடி வெண்பா, ஆழ்வார் திருவனந்தல், இரிஷிவிந்தக் குறவஞ்சி, இலக்கண தீபம், இலக்குமி வெண்பா, எக்காலக்கண்ணி, எட்டெட்டந்தாதி, எலிவிடுதூது, ஐயனார் கதை - வில்லுப்பாட்டு, கட்டிமகிபன் பள்ளு, கதிர்காமச் சிந்து, கருணாகரமாலை, குமாரபுரி முருகன் மும்மணிக்கோவை, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, சனிபகவான் தோத்திரம், சிதம்பர விலாசம், சிறுத்தொண்டன் சிந்து, ஞான உலா, தசாவதாரப்பத்து, திருக்கழுக்குன்ற மாலை, திருத்தணிகை முருகன் தாலாட்டு, திருத்தொண்டர் மாலை, திருப்புல்லாணி எம்பெருமான் மீது பாடிய தாலாட்டு திருவனந்தல், நலங்கு, திருப்புல்லாணி எம்பெருமான் மீதும் பதுமாசனித் தாயார் மீதும் பாடிய கிளைப்பாட்டு, திருமந்திர மாலை (திருமூலர் தியானக் குறிப்பு), திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ், திருவிளையாடற் பயகரமாலை, நம்மாழ்வார் ஊஞ்சற் கவிதை, நம்மாழ்வார் திருக்கோலக்கவி, நம்மாழ்வார் பதம், நல்லபிள்ளை சித்திர மடல், நல்வழிப் பாடல்கள், நவக்கிரக தோத்திரம், நாடோடிப் பாடல்கள், நாலுமந்திரி கதை, நீதிசாரக்கரு, நூற்றெட்டுத் திருப்பதி வெண்பா, நெஞ்சறி விளக்கம் - 1, நெஞ்சறி விளக்கம் - 2, நெஞ்சுபதேசக் கீர்த்தனங்கள், நெல்லைக் குமரன் துதி, பரிபூரண சித்தி,