பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

77

பர்த்ருஹரி சிருங்கார சதகம், பர்த்ருஹரி நீதி சதகம், பழனி மலை வடிவேலர் பதிகம், பழனியாண்டவர் கலித்துறை, பாதாதிகேச உவமானம், பாலையானந்தர் சுவாமியார் ஞானக் கும்மிப்பாடல்,பிரபந்த மரபியல், பூதர விலாசம், மாணிக்கப் பவழக்கோவை, மாணிக்கவாசகர் ஞானக்கலித்துறை, மாணிக்கவாசகர் திருமணியகவல், மீனாட்சியம்மன் கிளிப் பாடல், முருகரனுபூதி,முனிமொழி, மூவர் அம்மானை, யோக மாலை, வருகைப் பத்து, வாதவூரர் ஆனந்தக் களிப்பு, விராலி மலை வேலவர் காதல், விராலிமலை வேலவர் குறவஞ்சி நாடகம், வில்லிபாரதம் -மெளலி சூட்டுச் சருக்கம், வேங்கடேசப் பெருமாள் தமிழ்மாலை, வேதபுரி ஈசுவரர் அந்தாதி போன்ற 71 பருவ இதழ்ச் சுவடிப்பதிப்புகள் தமிழ்மொழியில் மட்டும் வெளிவந்துள்ளன.

இவ்விரு சுவடி நூலகப் பருவ இதழ்கள் பன்மொழிச் சுவடிகளை வெளியிட்டுள்ளன. எனவே, இப்பருவ இதழ்களைப் 'பன்மொழிப் பருவ இதழ்' என்றும் கூறலாம். சரஸ்வதிமகால் நூலகப் பருவ இதழில் நூற்பதிப்பன்றி ஆய்வுக் கட்டுரைகளும் பன்மொழியில் வெளிவந்துள்ளன. ஆனால், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழில் நூற் பதிப்புக்கள் மட்டுமே வெளிவந்திருக்கின்றன. இப்பருவ இதழ்களில் 99 விழுக்காடு முழுமையான சுவடியைக் கொண்ட பருவ இதழ்ச் சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. 4. ஆதீனப் பருவ இதழ்கள்

.

சமயத்தை வளர்க்கவும் பரப்பவும் இந்தியா முழுவதும் காலந்தோறும் ஆதீனங்கள் தோன்றியுள்ளன. ஆதீனங்கள் சமயத்தையும் மொழியையும் இரு கண்களாகப் போற்றின. இந்து சமயத்தில் சைவ, வைணவ, அத்வைத ஆதீனங்கள் தோன்றியுள்ளன. தருமையாதீனம், திருவாவடுதுறையாதீனம், திருப்பனந்தாள் காசித்திருமடம், காஞ்சி சங்கராச்சாரியார் திருமடம், ஸ்ரீராமகிருஷ்ண மடம், கோவை பேரூராதீனம், கோவை கௌமார மடம் போன்ற மடங்கள் சமய சாத்திர நூல்களையும் தமிழிலக்கிய இலக்கணம் மற்றும் மொழி பெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டு வருகின்றன.