பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.

இலக்கியம், சித்தாந்த சாத்திரம், தலபுராணம், திருமுறைகள், தல வரலாறுகள் போன்ற பொருண்மைகளில் தருமையாதீனம் 900க்கும் மேற்பட்ட நூல்களையும், திருவாவடுதுறையாதீனம் 460க்கும் மேற்பட்ட நூல்களையும், திருப்பனந்தாள் காசித்திருமடம் 200க்கும் மேற்பட்ட நூல் களையும் வெளியிட்டுள்ளன. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தவத்திரு இராமானந்த சுவாமிகள், தவத்திரு கந்தசாமி சுவாமிகள், தவத்திரு சுந்தர சுவாமிகள் ஆகியோரின் நூல்கள் மட்டும் வெளியிடும் நிலையில் கேரவை கௌமார மடாலயம் இதுவரை 225க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது.

தருமை யாதீனம், திருவாவடுதுறை யாதீனம், திருப்பனந்தாள் காசித் திருமடம், கோவை கௌமார மடாலயம் போன்ற மடங்கள் நூல்கள் வெளியிட்டு வருவதோடு பருவ இதழ்களையும் வெளியிட்டு வருகின்றன. இவ் இதழ்களில் ஆதீனத் தலைவர்களின் அருளாசி, அவர்தம் கருத்துகள், இதழ் சார்ந்த சமயச் செய்திகள், சமயநூல் கருத்துகள், சமய நூல்கள், சமயக் கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள், நூலாராய்ச்சிகள், நூல் அறிமுகம், சுவடிப் பதிப்புகள், சமய வாதங்கள் போன்றன இடம்பெறுகின்றன. ஆதீன இதழ்கள் எல்லாவற்றிலும் சுவடிப்பதிப்புகள் வெளிவருவதில்லை. ஆதீனங்கள் வெளியிட்ட இதழ்களில் வெளிவந்த சுவடிப்பதிப்புகளை 'ஆதீனப் பருவ இதழ்ச் சுவடிப்பதிப்புகள்' என்றும், ஆதீனங்கள் வெளியிட்ட பருவ இதழ்களை 'ஆதீனப் பருவ இதழ்கள்' என்றும் கூறலாம். சுவடிப்பதிப்புகளை வெளியிட்ட ஆதீனப் பருவ இதழ்கள் சிலவே. அவை,ஞானசம்பந்தம் (1941), குமரகுருபரன் (1950), ஸ்ரீசங்கர க்ருபா (1959), ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் (1960), ஸ்ரீகுமரகுருபரர் (1978), மாதாந்திர அமுதம் (1980), மெய்கண்டார் (1982) போன்றவையாகும்.