பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

ஞானசம்பந்தம்

79

'ஞானசம்பந்தம்' எனும் திங்களிதழ் ஸ்ரீமத் சிவகுரு நாதத் தம்பிரான் சுவாமிகளை ஆசிரியராகக் கொண்டு தருமையாதீன வெளியீடாக 1941ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வெளிவந்துகொண்டிருக்கின்றது. சைவ சமயத் திங்களிதழான இவ்விதழில் சைவசமயம் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும், இலக்கியம், இலக்கணம், தோத்திரம், சாத்திரம், வரலாறு, மருத்துவம், சோதிடம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளும், விவாதங்களும், சைவ இலக்கிய விளக்கங்களும், கல்வெட்டாராய்ச்சிகள் கவிதைகள் நாடகங்கள் பழந்தமிழிலக்கிய நூல்களும், அதற்கான உரைகளும் என வெளிவந்துகொண்டிருக்கின்றன. "ஞானசம்பந்தம் சிறப்பாகச் சைவ சித்தாந்தக் கொள்கையைப் பரப்பும் நோக்கத்தில் எழுந்து, வேலை செய்து வருகிறது. பொதுவான கடவுட் கொள்கையை அது போன்றி வருகிறது. இலக்கியம் சமயச் சார்புடைய இலக்கியங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறது. அச்சில் வாராத அருமையான நூல்கள் பல இதுவரை இதன்வழி வெளிவந்துள்ளன" (ஞானசம்பந்தம், 15:1:1955, ப.2).

-

நூல் பதிப்புகள் தனிப்பக்கத் தமிழெண் கொடுத்து முற்சேர்ப்பாக இவ்விதழில் இணைக்கப்பெற்றுள்ளது. மற்ற பகுதிகள் 1, 2, 3,... என்ற முறையில் அமைந்துள்ளன.

இவ்விதழில் உரூப சொரூப அகவல், காரைக்கால் அம்மையார் சரித்திரம், சங்கர சிவக்கொழுந்து மாலை, சிவசயிலப் பள்ளு, தாயுமானவர் மடல் -குறிப்புரையுடன், திருவாரூர் மும்மணிக்கோவை, திருவையாற்றுத் தருமசம்வர்த்தனி மாலை, திருவையாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி, தேவி மான்மியம், தையல்நாயகி அந்தாதி - மூலமும் உரையும், தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் உரையுடன், முத்தி நிச்சயம் ஆகிய பன்னிரண்டு சுவடிப்பதிப்புகள் வெளிவந்துள்ளன. குமரகுருபரன்

'குமரகுருபரன்' எனும் திங்களிதழ் திரு.டி.எம். குமர குருபரனை ஆசிரியராகக் கொண்டு ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமர