பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

குருபர சுவாமிகள் மடத்தின் வெளியீடாக 1950ஆம் ஆண்டு தை மாதம் முதல் 1977ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 28 ஆண்டுகள் வெளிவந்துள்ளது. பின்னர் இவ்விதழ் திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் வெளியீடாக ‘ஸ்ரீகுமரகுருபரர்' எனப் பெயர் மாற்றம் பெற்று வெளிவந்து கொண்டிருக்கின்றது.

"இப்பத்திரிகை மக்களின் அறிவு வளர்ச்சிக்கெனவே தோன்றுவதாகும். அறிவைப் பெருக்கி என்றும் அழியா இன்பப் பேற்றினை அருளும் 'மெய்ப்பொருள்' பெறுதலே இதன் குறிக்கோளாகும்...... அரசியல் வகுப்பு வாதங்களில் கலவாது கலைஞானத்தைப் பரப்புவதும் தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதுமே இப்பத்திரிகையின் நோக்கம். குமரகுருபர சுவாமிகள் பிரபந்தம், பன்னிரு திருமுறைகளின் ஆராய்ச்சி, உலகையுரக்கும் உழவு, விஞ்ஞானம், மாணவ மாணவிகட்கு அறிவுரையாகிய பொருள்களைப் பற்றிய கட்டுரைகளுடன் இஃது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் வெளிவரும்" (குமரகுருபரன், 1:1:1949, பக்.1-3) என்பர்.

குமரகுருபரன் ஓர் இலக்கிய சமய இதழாக வெளிவந்து உள்ளது. சமயம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளும், பழந்தமிழ் இலக்கியங்களுக்கு விளக்கங்களும், மடத்துச் செய்திகளும், இன்றைய புலவர்தம் கவிகளும், சுவடிப் பதிப்பு களும் அதற்கான உரைகளும் எனப் பல்வேறு நிலைகளில் இவ்விதழ் வெளிவந்துள்ளது. சமயக் குரவர்களைப் பற்றியும், குமரகுருபரைப் பற்றியும், அவர்களது நூல்களைப் பற்றியும் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வோர் இதழின் இறுதியில் 'கலைக்கோயிலில் வரப்பெற்றுக்கொண்ட புத்தகங்களின் விவரம்' தரப்பெற்றுள்ளது.

இவ்விதழில் அகவல்பா, குமரகுருபர சுவாமிகள் சரித்திரம், சிறைவிடந்தாதி, திருமயிலை உவமை வெண்பா, திருவாசக அனுபூதி - உரையுடன், பத்திநெறிப் பதிகம், மூவர் அம்மானை, விநாயக மான்மியம் ஆகிய எட்டுச் சுவடிப் பதிப்புகள் வெளிவந்துள்ளன.