பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

ஸ்ரீசங்கர க்ருபா

81

‘ஸ்ரீசங்கர க்ருபா' எனும் திங்களிதழ் கே.ஆர். வெங்கட் ராமனை ஆசிரியராகக் கொண்டு திருச்சி திருவரங்கத்திலிருந்து 1949ஆம் ஆண்டு முதல் வெளிவந்துள்ளது. சில காலம் வெளிவந்து நின்றும்விட்டது. பின்னர் மீண்டும் 1959ஆம் ஆண்டு சூலை முதல் கே.வ. சுப்ரதானத்தை ஆசியராகக் கொண்டு சிருங்கேரி சாரதாபீட வெளியீடாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. தமிழ்-ஆங்கிலம் - சமஸ்கிருதம் கலந்த மும்மொழி இதழாகத் திகழ்கின்றது.

இதில் சிருங்கேரி ஸ்ரீமகாசந்நிதானம் அவர்களின் உபதேசம், யோகம், ஞானம், கீதை உபதேசம், ஞானவாசிட்ட சுருக்கம், ஸ்ரீசாரதா புஜங்கம், வேதப்பிராமாணியம், ஸ்ரீகுருகிருபா விலாசம், அபிராமி அந்தாதி, குறிப்புகள், இன்றைய புலவர்தம் நூல்கள், கவிதை, நாடகம், கீதசந்தோசம், ஆத்மபோதம் போன்றவை தொடர்பாகக் கட்டுரைகளும் ஆய்வுகளும் வெளிவந்துள்ளன.

இவ்விதழில் 'அநுபோக ரத்னமாலை' எனும் சுவடிப்பதிப்பு மட்டும் வெளிவந்துள்ளது.

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்

‘ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்' எனும் திங்களிதழ் பண்டித ராஜா. வி. சுப்பிரமணிய சாஸ்திரியை ஆசிரியராகக் கொண்டு காஞ்சி சங்கரமட வெளியீடாகச் சென்னையிலிருந்து 1960ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இது, தமிழ் - சமஸ்கிருதம் - ஆங்கிலம் கலந்த மும்மொழி இதழாகத் திகழ்கின்றது.

-

சநாதன தர்மத்தின் முக்கிய நோக்கங்களையும், அடிப்படைக் கருத்துகளையும், உண்மைகளையும் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அமைந்த சிறந்த கட்டுரைகள் இவ்விதழில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆசாரியர்களின் அருள்வாக்கு, புராணக்கதை, சிவமூர்த்தம், ஸ்ரீமந்நாராயணீயம், இந்து சமயக் கொள்கைகள், ஆஸ்திகர்கள் கொண்டாடும் விழாக்கள், புண்ணிய காரியங்கள், பூஜை முறைகள், இலக்கியக் கட்டுரைகள், ஸ்ரீசங்கர பகவத்