பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

83

அவர்தம் மறைவிற்குப் பிறகு குடம் 16 முதல் தவத்திரு குமர குருபர சுவாமிகள் சிறப்பாசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

இவ்விதழில் கௌமாரம் தொடர்பான ஆய்வுகளும், செய்திகளும், துணுக்குகளும், நூல்களும் வெளிவருகின்றன. மேலும் மாதச் செய்திகள், சிறப்பாசிரியர் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகள், மடாலயத்துப் பள்ளிக்கூடத்தின் செய்திகள் மற்றும் கருத்தரங்க நிகழ்வுகள் போன்றன வெளிவருகின்றன. குறிப்பாக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தவத்திரு இராமானந்த சுவாமிகள், தவத்திரு கந்தசாமி சுவாமிகள், தவத்திரு சுந்தரசுவாமிகள் ஆகியோரின் நூல்கள், அந்நூல்கள் தொடர்பான கருத்துக்கள் வெளியிடுவதைத் தமது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

இவ்விதழில் அறநெறி வெண்பா, இராமானந்தத் திரட்டு (சூரியமூர்த்தி பதிகம், சைவ சமயம், சாத்தேய சமயம், காணாபத்ய சமயம், வைணவ சமயம், விநாயகர் பதிகம், மெய்ஞ்ஞானக்காதல், பஞ்சகம், கௌமார சமயம், பதிக அந்தாதி, பிடித்த பதிகம், சற்குரு பதிகம், சற்குரு அந்தாதி மாலை, சந்தப் பதிகம், தயாநிதிக் கண்ணி, அடைக்கலப் பதிகம், பெரியோர் வணக்கம், குருகீத ரசம், சபரிமலை ஐயப்பசாமி பதிகம்), ஈச்சநாரி விநாயகர் பதிகம், ஈச்சநாரி விநாயகர் பதிற்றுப்பத்தந்தாதி, கருணாம்பிகை யமக அந்தாதி, காரமடை ஆண்டாள் பதிகம், கீரநத்தம் விநாயகர் திருப்புகழ், கீரநத்தம் விநாயகர் பதிகம், குருந்தமலை ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி பிள்ளைத்தமிழ், குருமுதற் பாசுர நூல், கோவை இராமநாதபுரம் விநாயகர் பதிகம், கௌமார வினோத நூல், சரித்திர சார வண்ணம், சிரவை சற்குரு பதிகம், ஞானவந்தாதி, தண்டபாணி மாலை, திருச்செந்தூர் முருகக்கடவுள் நற்றாய் இரங்கல் வண்ணம், திருப்பழனி முருகக்கடவுள் கலவிமகிழ்தல் வண்ணம், தில்லை இதழகல் அந்தாதி, நெல்லை இதழகல் அந்தாதி, பதிக உந்தி நூல், பேரூர் ஸ்ரீஅகிலாண்டநாயகி பதிகம், மகாலக்குமி பதிகம், வெள்ளக்கிணற்று வள்ளிநாயகன் பதிகம் ஆகிய இருபத்துநான்கு சுவடிப்பதிப்புகள் வெளிவந்து இருக்கின்றன.