பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

3

இச்சுவடிப் பதிப்பிற்கு யாழ்ப்பாணம் நல்லூர் க. ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை ஆகிய நால்வரும் சிறப்பாகத் தொண்டாற்றியவர்களாவர். சுவடிப்பதிப்பு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறை செய்தவர்கள் இவர்கள். எவ்வெவ் வகைகளில் எல்லாம் சுவடிகளை ஆராய்ந்து எளிமைப்படுத்தி மக்களுக்கு அளித்தால் பயனுடையதாக இருக்குமென்று செய்து காட்டிய வர்கள். சுவடிப்பதிப்பு நெறிமுறைக்கு வித்திட்டவர்கள் இவர்கள். "பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து, நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர்' (சுவடிக்கலை, மேற்கோள், ப.134) என்று திரு.வி.க. இப்பதிப் பாசிரியர்களுக்குப் புகழாரம் சூட்டுகின்றார். இவர்களுக்கு முன்னும் பின்னுமாகச் சுவடிப்பதிப்புப் பணியைச் சிறப்பாகச் செய்தவர்கள் பலராவர்.

66

திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர், அ. முத்துச் சாமிப் பிள்ளை, புதுவை நயனப்ப முதலியார், முகவை இராமாநுசக் கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், மழவை மகாலிங்கையர், தாண்டவராய முதலியார், திருத்தணிகை ச. விசாகப் பெருமாளையர், திருத்தணிகை ச. சரவணப் பெருமா ளையர், திருவேங்கடாசல முதலியார், சந்திரசேகர கவிராச பண்டிதர், திரிசிரபுரம் வி. கோவிந்த பிள்ளை, கொட்டையூர் த.சிவக்கொழுந்து தேசிகர், காஞ்சிபுரம் மகாவித்துவான் சி.எஸ். சபாபதி முதலியார், யாழ்ப்பாணம் கோப்பாய் அம்பலவாண பண்டிதர், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அம்பலவாண நாவலர், யாழ்ப்பாணம் மன்னிப்பாய் அருணாசல சதாசிவம் பிள்ளை, தொண்டை மண்டலம் இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர், மகாவித்துவான் சி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வடலூர் இராமலிங்க அடிகள், சோடசாவதானம் வீ.சுப்பராய செட்டியார், கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை, யாழ்ப்பாணம் உடுப்பிட்டி கு. கதிரைவேற்பிள்ளை, புதுவை