பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மெய்கண்டார்

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

'மெய்கண்டார்' எனும் திங்களிதழ் திருவாவடுதுறை ஆதீன வெளியீடாக 1982ஆம் ஆண்டு திசம்பர் முதல் வெளிவந்துகொண்டு இருக்கின்றது. முதல் பதினான்கு மலர்களுக்கு ஸ்ரீமத் சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அடுத்து பதினைந்தாவது மலரிலிருந்து தவத்திரு புலவர் சுயம்புநாதத் தம்பிரான் சுவாமிகள் செயலாற்றி வருகின்றார்.

இவ்விதழில் தேவாரங்களின் பொருளடைவு, திருமுறை அட்டவணை, ஆதீனச் செய்தித்திரட்டு, ஆதீன சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சி மையம் நடத்திய பாடச்சுருக்கம் (இவை பின்னாளில் தனி நூல்களாக வெளியிடப்பெற்றுச் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மாணவர்களின் தனிச்சுற்றுக்கு வழங்கப்பெற்றுள்ளன), சித்தாந்த சைவத்தில் எழுப்பப்படும் ஐயவினாக்களுக்கான விளக்கம், ஆன்மிகக் கட்டுரைகள், அகராதிகள் (துறைசைத் தமிழகராதி, சாசனச்சொல் அகராதி), திருமூலர் திருமந்திரம் ஸ்ரீபஞ்சாக்ஷரதீபம் எனும் உரை, ஆதீனத்தில் உள்ள கல்வெட்டுகள் - செப்பேடுகள் -ஓலைகள் பற்றிய குறிப்புகளும் வெளியீடுகளும், ஆதீனச் சமயப் பிரச்சாரக் குறிப்புகள், உரையுடன் தேவாரத் திருப்பதிகங்கள் போன்றன வெளிவந்துள்ளன. இவையல்லாமல் சில சுவடிப்பதிப்புகளும் வெளிவந்திருக்கின்றன.

-

.

திருஞானசம்பந்த சுவாமிகள் ஆனந்தக்களிப்பு, விநாயகர் தோத்திராஷ்டகம், ஸ்ரீமெய்கண்ட தேசிகர் மாலை ஆகிய மூன்று சுவடிப்பதிப்புகள் இவ்விதழில் வெளிவந்துள்ளன. 5. நிறுவனப் பருவ இதழ்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனியார் அச்சகங்கள் சுவடிப்பதிப்புகளையும் பருவ இதழ்ச் சுவடிப்பதிப்புகளையும் வெளியிட்டதைப் போல் இருபதாம் நூற்றாண்டில் நிறுவனச் சுவடிப்பதிப்புக்களும் நிறுவனப் பருவ இதழ்ச் சுவடிப் பதிப்பு களும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன. நிறுவனம்