பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

85

வெளியிட்ட பருவ இதழை 'நிறுவனப் பருவ இதழ்' என்றும், நிறுவனப் பருவ இதழில் வெளிவந்த சுவடிப்பதிப்பை 'நிறுவனப் பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு' என்றும், சுவடிப் பதிப்புகளை வெளியிட்ட நிறுவனப் பருவ இதழை 'நிறுவனச் சுவடிப் பதிப்புப் பருவ இதழ்' என்றும் கூறலாம். இந்நிறுவனச் சுவடிப் பதிப்புப் பருவ இதழ்களை வெளியீட்டு நிலையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, தனியார் நிறுவனப் பருவ இதழ்கள்; மற்றொன்று, அரசு நிறுவனப் பருவ இதழ்கள் என அவை அமையும்.

அ. தனியார் நிறுவனப் பருவ இதழ்கள்

குறிப்பாக, சென்னைப்

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் நூல்களை அச்சிட்டு விற்பனை செய்வதற்காகப் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தோன்றின. பாடப்புத்தக சங்கம் (1850), பொதுக்கல்விப் பயிற்சித்துறை (1854), கிறித்தவத் தாய்மொழிக் கல்விக்கழகம் (1858), ரிப்பன் புத்தகசாலை, ஊ. புஷ்பரதஞ்செட்டியார் அண்டு கோ., மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், கிறிஸ்தவ இலக்கியக் கழகம் (1891), அல்லயன்ஸ் அண்டு கோ (1908), ஒற்றுமை ஆபீசு வெளியீடு, மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், பூமகள் அச்சுக்கூடம், சிரோன்மணி விலாச அச்சுக்கூடம், இ.மா. கோபாலகிருஷ்ண கோனார் அண்டு கோ., பி. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், விவேக போதினி, ஆனந்தபோதினி, மறைமலையடிகளின் பொதுநிலைக் கழகம், சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம், ஞாயிறு நூற்பதிப்புக் கழகம், புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகம், சக்தி காரியாலயம், கலைமகள் காரியாலயம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், தென்னிந்திய மொழிகள் புத்தக நிறுவனம், சைவ சித்தாந்த மகாசமாஜம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ஜைனச் சங்கப் பதிப்பகம், ஜைன அறநிலையம், ஜைன சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், வைணவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஜைன இளைஞர் மன்றம், ஜைன சித்தாந்த நிலையம், ஜைன