பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

இலக்கிய ஆராய்ச்சி மன்றம், மணிவாசகர் பதிப்பகம், ஆசியவியல் நிறுவனம், பழந்தமிழ்ச் சுவடிகள் பாதுகாப்பு மையம் போன்ற தனியார் நிறுவனங்களைக் குறிப்பிடலாம்.

இந்நிறுவனங்கள் சுவடிப்பதிப்புக்களை வெளியிட்டு வருகின்றன. இவற்றில் சில நிறுவனங்கள் பருவ இதழ் களையும் நடத்தியுள்ளன. குறிப்பாக, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் (செந்தமிழ்ச் செல்வி), தென்னிந்திய செங்குந்தர் மகாஜனசங்கம் (செங்குந்தமித்திரன்), சக்தி காரியாலயம் (சக்தி, மங்கை, கதைக்கடல், அணில்), கலைமகள் காரியாலயம் (கலைமகள், மஞ்சரி), தென்னிந்திய மொழிகள் புத்தக நிறுவனம் (புத்தக நண்பன்), சைவ சித்தாந்த மகாசமாஜம் (சித்தாந்தம்), ஜைன இளைஞர் மன்றம் (முக்குடை), ஜைன அறநிலையம் (நல்லறம்) போன்ற நிறுவனங்களைக் குறிப்பிட லாம். இவற்றில் சித்தாந்தம் (1912), கலைமகள் சென்னை (1923), செந்தமிழ்ச் செல்வி (1923), செங்குந்தமித்திரன் (1927), சித்தாந்தம் (1928), சக்தி (1939), நல்லறம் (1958), தேனோலை (1974), முக்குடை (1974) போன்ற பருவ இதழ்கள் சுவடிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளன.

சித்தாந்தம் (1912)

-

பூவை. கலியாணசுந்தர முதலியாரை (மணவழகு) ஆசிரியராகக் கொண்டு 'சித்தாந்தம்' (1912) எனும் திங்களிதழ் 1912ஆம் ஆண்டு சனவரி முதல் வெளிவந்துள்ளது. இது 1905ஆம் ஆண்டு சென்னையில் தோன்றிய சைவசித்தாந்த மகாசமாஜத்தின் வெளியீடாகும். சைவ சமயம் தொடர்பான கட்டுரைகள், திருமுறை மற்றும் சாத்திர நூலாராய்ச்சிகள், கட்டுரைகள், நூலறிமுகம் போன்றன இவ்விதழ்ப் பொருள்களாக இருந்துள்ளன். சுவாமி வேதாசலம் (மறைமலையடிகள்) அவர்களின் சித்தாந்தக் கட்டுரைகள் பல இதில் வெளிவந்த வையே. தமிழறிஞர்கள், சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு மிக்கோர் அனைவரும் தங்களின் கருத்துக்களைக் கட்டுரைக ளாக இவ்விதழில் வெளியிட்டுள்ளனர்.