பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

87

இவையன்றி சுவடிப் பதிப்புகளும் இவ்விதழில் வெளிவந்துள்ளன. குறிப்பாக, திரிபதார்த்த தசகாரியம், பதிபசுபாசத் தொகை ஆகிய இரண்டு சுவடிப்பதிப்புகளைக் குறிப்பிடலாம். இவ்விதழ் 1920க்கு மேலும் நடந்தது என்கின்றார் மு. அருணாசலம். இவ்விதழ்கள் இன்று கிடைப்பது அரிதாக இருக்கின்றது.

கலைமகள் சென்னை

-

‘கலைமகள்’ எனும் திங்களிதழ் ஆர். நாராயணசாமி ஐயரை ஆசிரியராகக் கொண்டு 1932ஆம் ஆண்டு சனவரி முதல் சென்னை கலைமகள் காரியாலயத்தின் வெளியீடாக வெளிவந்து கொண்டு இருக்கின்றது. இவ்விதழின் கௌரவ ஆசிரியர்களாக திருவாளர்கள் எஸ். அனவரத விநாயகம் பிள்ளை, டி.கே.சிதம்பரநாத முதலியார், எஸ். வையாபுரிப்பிள்ளை, பி.என். அப்புசாமி ஐயர், மு. இராகவையங்கார், கே.வி.கிருஷ்ணசாமி ஐயர் போன்றோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில் இலக்கியம், நற்கலை, சாஸ்திரம், சரித்திரம், மாதர் பகுதி, சிறுவர் பகுதி, மதிப்புரை, குறிப்பும் திரட்டும் போன்ற பகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும், மிகச் சிறந்த சிறுகதைகள், தொடர் கதைகள், கவிதைகள், இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் மற்றும் இலக்கியங்கள் போன்றனவும் வெளிவந்துள்ளன.

இவ்விதழாசிரியர், "பிரபலமான தமிழ் வித்துவான்களும் ஆங்கில பாஷையிலும் தமிழிலும் தேர்ச்சியடைந்த பல கலைஞர்களும் இதற்கு விஷயதானம் செய்து வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். நம் தாய்மொழியாகிய தமிழில் உள்ள பல நூல்களின் அருமை பெருமைகளை எடுத்துக்காட்டி யாவரும் இன்புறச் செய்வதோடு வேறு பாஷையிலும் வேறு தேசங்களிலும் உள்ள அரிய சாஸ்திர விஷயங்களையும் கல்விமான்களுடைய உதவியினால் இப்பத்திரிகை மூலமாய் வெளிப்படுத்தலாமென்று நினைக்கிறோம். அன்றியும் நீதி தருமங்களை உணர்த்தும் படியான கதைகளும், சிறுவர்களும்