பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

பெண்களும் களிப்படையக் கூடிய விநோத விஷயங்களும் அமைக்கவேண்டும் என்பது எமது கருத்து. இவ்விஷயங்க ளெல்லாம் கூடிய வரையில் எல்லாரும் எளிதில் அறிந்து கொள்ளும் படியான நடையிலேயே அமைந்து இருக்கும். இதில் நம் தேசத்திலுள்ள சிற்பம், ஓவியம், சங்கீதம் முதலிய கலைகளின் மேம்பாட்டைப் படங்களுடன் எடுத்துக் காட்டவும் முயல்வோம். தமிழர்கள் அனைவரும் இப்பத்திரிகையை ஆதரித்து விருத்தியாகும்படி செய்வார்களென்று நம்புகிறோம் (கலைமகள், 1:1:1932) என்று இவ்விதழின் நோக்கத்தையும் வேண்டுகோளையும் வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.

இவ்விதழின் தொகுதி எண் மாறிமாறி வந்தாலும் பகுதி

எண் மட்டும் தொடர்ந்து தொடரெண்ணைப் பெற்று வெளிவந்து கொண்டிருக்கின்றது. இன்று வரை இவ்விதழ் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருப்பினும் தொடக்க காலக் கலைமகளும் பிற்காலக் கலைமகளும் உள்ளடக்கத்தில் பெரும் மாறுதலுடன் காணப்படுகின்றன. உ.வே.சா. அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்தம் குறிப்புரையுடன் பல சுவடிப்பதிப்புகள் மற்றும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இவ்விதழில், உதயணகுமார காவியம், களக்காட்டு சத்தியவாசகர் இரட்டை மணிமாலை, சிவசிவ வெண்பா, தமிழ்நெறி விளக்கம், திருஇலஞ்சி முருகன் உலா, திருக்காளத்தி இட்டகாமிய மாலை, திருக்குற்றாலக்குறவஞ்சி, திருக்குற்றாலச் சிலேடை வெண்பா, திருமலையாண்டவர் குறவஞ்சி, பத்மகிரி நாதர் தென்றல்விடுதூது, பழனி இரட்டைமணிமாலை, பாச் வதைப் பரணி,புகையிலைவிடுதூது, மகரநெடுங் குழைக்காதர் பாமாலை, மான்விடுதூது, வலிவல மும்மணிக் கோவை ஆகிய பதினாறு சுவடிப்பதிப்புகள் வெளிவந்து இருக்கின்றன. செந்தமிழ்ச் செல்வி

திருவாளர் தி.செ.விசுவநாதம் பிள்ளையின் உதவி யோடும் திருவாளர் வ. திரவியப் பிள்ளையின் உறுதுணை யோடும் திருவாளர் வ.சுப்பையா பிள்ளை 21.09.1920ஆம் ஆண்டு திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த