பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

89

நூற்பதிப்புக்கழகம் லிமிடெட் தொடங்கினார். இது, முதலில் விற்பனைக் கழகமாகவும் பின்னர் நூற்பதிப்புக் கழகமாகவும் மாறியது.

இக்கழகம் சிறந்த கட்டுரைகளையும், கழகப் பணி களையும் கழகக் கொள்கைகளையும் வெளியிடும் பொருட்டுச் 'செந்தமிழ்ச் செல்வி' எனும் திங்களிதழைத் தைத் திங்கள் 1923ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. இதன் முதல்

பத்திராசிரியராக மணி. திருநாவுக்கரசு முதலியார் நியமிக்கப் பட்டார். இதழாசிரியர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இக் குழுவிற்குத் தலைவராகத் திருவாளர் மணி. திருநாவுக்கரசு முதலியாரும், உறுப்பினர்களாகத் திருவாளர்கள் பா.வே. மாணிக்க நாயக்கர், கா. சுப்பிரமணிய பிள்ளை,ச.சச்சிதா னந்தம் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், அ.சிதம்பர னார், மா.வே.நெல்லையப்ப பிள்ளை, மு. கதிரேசஞ் செட்டியார் ஆகிய பெரும் புலவர்கள் பணியாற்றியுள்ளனர். இதற்குப் பிறகு பதிப்பாசிரியராக இருந்தவர் திருவாளர் வ. சுப்பையா பிள்ளை ஆவார். இவர் ஏப்ரல் 1983ஆம் ஆண்டு வரை இவ்விதழைத் திறம்பட நடத்தி வந்தார். இவர்தம் மறைவிற்குப் பிறகு மே 1983ஆம் ஆண்டு முதல் தாமரைச் செல்வரின் மருமகனார் இரா. முத்துக் குமாரசாமி பதிப்பா சிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

இவ்விதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது. என்றாலும் இடையிடையே சில திங்கள்கள், சில ஆண்டுகள் விடுபட்டுள்ளது. அதாவது, தைத் திங்கள் 1923ஆம் ஆண்டு தொடங்கிய இவ்விதழ் சிலம்பு 1, பரல் 1 முதல் சிலம்பு 11, பரல் 6, 1933ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வெளிவந்துள்ளது. அடுத்த இதழான ஆவணி இதழ் சிலம்பு 12, பரல் 1, 1933ஆம் ஆண்டு என்று வெளிவந்துள்ளது. சிலம்பு 11இல் 7-12க்கான பரல்கள் இல்லை. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்க்கும்போது சிலம்பு 12லிருந்து வெளிவந்த சிலம்புகளில் முதல் பரல் ஆவணி மாதத்தில் தொடங்குகிறது. இம்முறை நீண்ட ஆண்டுகளுக்கு நிலைக்கவில்லை. சிலம்பு 16, பரல்