பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

8, 1937-38 பங்குனி வரை தொடர்ந்து வெளிவந்திருக்கின்றது. அதன் பிறகு 1938 சித்திரை முதல் 1939 பங்குனி வரை செந்தமிழ்ச் செல்வி வெளிவரவில்லை. 1939 சித்திரையை முதல் பரலாகக் கொண்டு 17ஆம் சிலம்பு வெளிவரத் தொடங்கியது. இம்முறையும் நீண்ட காலம் நிலைக்கவில்லை. சிலம்பு 19, பரல் 12, 1941-42 வரை சித்திரை முதல் பரலைக் கொண்ட இவ்விதழ் சிலம்பு 20. பரல் 1ஆனது 1942ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் தொடங்குகிறது. 1942ஆம் ஆண்டு வைகாசி - ஐப்பசி ஆகிய ஆறு திங்கள்கள் இவ்விதழ்ப் பகுதிகள் வெளிவரவில்லை. சிலம்பு 20.. 21 ஆகிய இரண்டு இதழ்கள் மட்டும் கார்த்திகையில் தொடங்கி 1943ஆம் ஆண்டோடு இதழ் நின்றிருக்கின்றது. சிற்சில திங்கள்கள் அவ்வப்போது நின்றும் மீண்டும் வெளிவந்து கொண்டும்

ருந்த செந்தமிழ்ச் செல்வி 1944-47ஆம் ஆண்டுப் பகுதிகள் வெளிவரவில்லை. "1944இல் வெள்ளைத்தாளில் 'செல்வி' இதழை அச்சிடக் கூடாது என்று அரசு ஆணையிட்டபோது, மட்டத்தாளில் வெளியிட விரும்பாமல் 1947 வரை நான்காண்டுகள் பதிப்பிக் காமலே பதிப்பாளர் நிறுத்தி வைத்தனர்" (மா.சு. சம்பந்தம், தமிழ் இதழியல் வரலாறு, ப. 68) என்பதால் இக்காலப் பகுதியில் இதழ் வெளிவராமைக்கான காரணம் தெரிகின்றது. இதன் பிறகு செந்தமிழ்ச் செல்வி தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கின்றது.

+

சங்கப் பாடல்கள், புராணம், இதிகாசம், பிற்காலச் சான்றோர் நூல்கள், தமிழ் வரலாறு, தமிழ்ப் புலவர் வரலாறு, தமிழ் மன்னர் வரலாறு, மொழிபெயர்ப்புகள், சொல்லா ராய்ச்சிகள், புதுக்கருத்துக்களுக்கேற்ற தமிழ்ச் சொற்கள், சைவ சமய நூற்பொருள்கள், புறச்சமய உண்மைகள் போன்றவற்றை எடுத்துரைக்கும் இவ்விதழ் உள்ளத்தை மகிழ்வித்து, உணர்ச்சியை ஊட்டி, அறிவைப் பெருக்கும் கூற்றுகளில் முனைந்து நிற்கும். மேலும் கண்ணுக்கும் கருத்துக்கும். விருந்தளிக்கும் காட்சிப் படங்கள் கொண்டும் இவ்விதழ் வெளிவரும் என்பர். இதனை, "தமிழ் வகையில் பழஞ் சங்கச் செய்யுட்கள், புராணம், இதிகாசம்,