பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

91

பிற்காலத்துச் சான்றோர் நூல்கள் முதலியவற்றிலுள்ள அரும் பொருட்டிறங்களையும் புத்தம் புதிய முறையில் ஆராய்ந்து 'செந்தமிழ்ச்செல்வி' கூறும். தமிழ் வரலாறு, தமிழ்ப் புலவர் வரலாறு, தமிழ் மன்னர் வரலாறு முதலியனவும் அவ்வப்போது எடுத்துரைக்கும். அன்றியும் இதன்கண் தமிழ் நன்மக்களுக்கும் பெரும் பயன்தரும் பொருள்கள் பிறமொழிகளினின்று மொழிபெயர்த்து வெளியிடப்பெறும். சொல் ஆராய்ச்சி,

புதுக்கருத்துகட்கு ஏற்ற தமிழ்ச் சொல்லாக்கல் முதலியனவும் இதில் பேரறிஞரால் எழுதப்படும். தமிழ் மொழியின் தனித் தன்மை இனிது விளங்கச் செந்தமிழ்ச் சொற்களே இதனுள் பெரிதும் பெய்துரைக்கப்படும். தமிழின் சீரிய நிலையை அரசியலாரும் கல்வித் துறையினரும் அறிந்து உரியன புரியுமாறு இது கிளர்ச்சி செய்யும்.

"

இது சமயத்திறத்தில் எம்மதமும் சம்மதமாகக் கொண்டு சைவ சமய நூற்பொருள்களைத் தெள்ளத் தெளிய எவரும் விளக்கும்; நன்கெடுத்து உணருமாறு புறச்சமயங்களிலுள்ள உண்மைகளையும் சமயம் நேர்ந்துழிக் கோட்டமின்றி நடுநிலையில் நின்று கூறும்.

இனி இஃது அரசியலைக் குறித்து யாதும் புகலாது மோன விரதம் பூண்டு நிற்கும். பொருட் பேறுடைய உலகச் செய்தித் திரட்டையும் அடிக்கடி வெளியிடும். சீர்திருத்தம் பற்றி வாய்த்த போதெல்லாம் தனக்குத் தோன்றியதை அஞ்சாது எடுத்துரைக்கும்.

ஆசார

அன்றியும் இவ்விதழ் உள்ளத்தை மகிழ்வித்து, உணர்ச்சியை யூட்டி, அறிவைப் பெருக்கும் கூற்றுகளில் முனைந்து நிற்கும்; கண்ணுக்கு விருந்தாகக் காட்சிப் படம் பல கொண்டு திகழும்" (சிலம்பு 1, பரல் 1, 1923) என்று இவ்விதழாசிரியர் குறிப்பிடுகின்றார்.

இவ்வுயரிய நோக்கோடு தோன்றி வளர்ந்த செந்தமிழ்ச் செல்வியில் சுவடிப்பதிப்புகள் சிலவும் வெளிவந்திருக்கின்றன. அவை, இளசை ஒருபாவொருபஃது, குருபரம்பரை அகவல்,