பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

சிவானந்த போதம், தத்துவ விளக்கம், தாள சமுத்திரம் உரையுடன், தாளவோத்து -நூற்றெட்டுத் தாளங்கள், திருஞான சம்பந்த சுவாமிகள் திருத்தாலாட்டு, திருஞானத் தாழிசை, திருவிசைப்பாவுடையார் துவாதசமாலை, நியதிப்பயன், பஞ்ச மரபு மூலமும் உரையும், பொன்னானிக்கோவை, மாயாப் பிரலாபம், முத்தி நிச்சயம் ஆகிய பதினான்கு சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

"கழகம் வெளியிட்ட பழந்தமிழ் இலக்கண இலக்கி யங்கள் யாவும் ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு ஆய்வு வெளியிடப்பெறவில்லை என்பது உண்மை. ஆனால், அவை முன்னமே வெளிந்துள்ள மூலப் படிகளையும் உரைப்படி களையும் திருத்தப் பாடங்கண்டு புத்துரை விளக்கங்கள் எழுதி வெளியிடப்பட்டவையாகும்" (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 45, ப.556) என்னும் வ. சுப்பையா பிள்ளையின் கூற்று வழி, கழகம் சுவடிப்பதிப்பு வெளியிடவில்லை என்று தெரிகின்றது. ஆனால், அச்சிட்ட நூற்படிகளோடு ஏட்டுப்படிகளை ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்தம் செய்து வெளியிடப்பெற்ற கழகப் பதிப்புகள் சில உண்டு. குறிப்பாக, பேராசிரியர் கந்தசாமியின் 'தொல்காப்பியம் சேனாவரையம்', பின்னத்தூர் நாராயண சாமியின் உரையோடு கூடிய 'நற்றிணை', கருப்பக்கிளார் சு.அ. இராமசாமிப் புலவரின் உரையுடன் பொ.வே. சோமசுந்தரனாரின் ‘சூளாமணி', ஔவை சு. துரைசாமிப் பிள்ளையின் விளக்க வுரையுடன் 'பதிற்றுப்பத்து மற்றும் புறநானூறு' ஆகிய நூற் பதிப்புகளைச் சுட்டலாம்.

இம்மறைமுகச் சுவடிப்பதிப்பில் ஈடுபட்ட கழகம் செந்தமிழ்ச்செல்வி இதழில் நேரிடையாக மறைந்துபோகும் நூல்களை அறிமுகப்படுத்தி அந்நூல்களைத் தமிழுலகில் நிலைநிறுத்தும் பணியினைச் செய்துள்ளது எனலாம்.

செங்குந்தமித்திரன்

காஞ்சி, நாகலிங்க முனிவரை ஆசிரியராகக் கொண்டு 'தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க'த் திங்கள் வெளியீடாக