பக்கம்:பருவ மழை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(சிலம்பொலி சு. செல்லப்பன், எம். ஏ., பி.டி) கு. சா கி என்ற மூன்றெழுத்துக்களால் சிறப்பிக்கப் படும் நம் கவிஞர் முத்தமிழுக்கும் சொந்தக்காரர்.இயற் றமிழ்ப் புலவர்; இன்னிசை அறிஞர்; நாடக ஆசிரியர். இன்றுள்ள மூத்த கவிஞர் வரிசையிலுள்ள இவர் கடந்த நாற்பதாண்டுகட்கு மேலாகத் தொடர்ந்து எழுதி வந்துள்ள பன்னூறு கவிதைகளில் ஒரு நூறு கவிதைகளை இந்நூலில் தொகுத்தளிக்கிருர், எளிய தோற்றமும் இனிய குணநலன் களையும் கொண்ட இவரைப் போன்றே இவருடைய கவிதை களும் எளிய நடையுடனும் ஆனல் ஆழ்ந்த கருத்துப் பொதிந் தனவாயும் அமைந்திருக்கக் காண்கிருேம். எது கவிதை? கவிதை வெறும் யாப்பமைதி கொண்டதாக மட்டும் இருத்தல் போதாது என்பதை, யாப்பும் இலக்கணமும் அணியும் தெரிந்தெழுத்தைக் கோப்பதுதான் கவிதையென்ருல் குப்பையிலே போடென்பேன்! (பக். 73) என்று குறிப்பிடும் கவிஞர், வாழ்க்கை வழிகாட்டியாக விளங்குவனவே கவிதைகள் என்ற சிறப்புக்குரியன எனவும் விளக்குகிருர், 'முந்தியவர் பெருமைசொல்லி மூண்டிருக்கும் சிறுமை எள்ளி வந்திடும்காலம்சிறக்க வழிகாட்டல் கவிதையென்பேன் (பக். 74)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/10&oldid=807212" இலிருந்து மீள்விக்கப்பட்டது