பக்கம்:பருவ மழை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்பொழுதே இப்புனிதப் பணிமுடித்தே ஏகிடுவேன் அதற்கிடையில் ஒரு கருத்து கற்பனையோ, உண்மையதோ, தீர்ப்புச் சொல்ல காணிக்கை யாக்குகின்றேன்-கவனம் வைப்பீர்! பாரதியென் ருெருபெயர்கம் கலைவாணிக்குப் பகர்வதுண்டு, அவளேதான் ஒளவை யாராய்ப் பாரினிலே பிறந்தாளென்று ஒருபு ராணப் பார்வையுண்டு; ஒளவைக்கும் பார திக்கும் சீருயர்ந்த யானைமுகத் தேவன் தன்பால் சிறப்பாகப் பக்திசெய்யும் சிந்தை யுண்டு! காரியத்தைக் கணக்காய்ந்தால் ஒளவை யாரும் கவியரசன் பாரதியும் ஒருவர் தானே? ஏனிந்தச் சந்தேகம் எழுந்த தென்ருல் இருவரும்தான் ஐங்கரனை நினைத்து, பக்தி ஆனந்தப் பூசனைகள் புரிந்தார்; அந்த ஐங்கரன்தான் இருவரையும் துதிக்கை கொண்டு வானுர்ந்த கைலாயம் சேர்ந்தா னென்ற வரலாற்றுக் கதைகிகழ்த்தும் வியப்பி ேைல நானுர்ந்த சந்தேகம் தன்னை ஆய்ந்து நல்லறிஞர் தான்தெளிந்து தீர்க்க வேண்டும்! 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/100&oldid=807213" இலிருந்து மீள்விக்கப்பட்டது