பக்கம்:பருவ மழை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கல் விழா பொங்கல் திருநாள் மனைகளெல்லாம் பால் பொங்கக் கதிரவனைப் பணிவோம்-சீதத் திங்கள் முகஎழில் மங்கையரே ஒன்று சேர்ந்திங்கு கும்மியடிப் போமடி! ஞாலத்துயிர்க் குலம் யாவினுக்கும் கல்ல நன்மை பயக்கும் இயற்கையிலே-இங்கு காலக் கதிரவன்போல் உலகில் வேறு கண்கண்ட தெய்வம் எங்குமுண்டோ? செங்கதிர் வானில் மலர்ந்ததடி இங்கு சேர்ந்த இருளெல்லாம் மாய்ந்ததடி-புட்கள் மங்கள இன்னிசை பாடுதடி களி மாமயில் கூடிக் கூத்தாடுதடி! தங்க மணிகள் என நிலத்தில் இட்ட தானியம் ஒன்றுக்கு ஆயிரமாய்-உல கெங்கும் விளைய அருளிய இரவி ஏற்றத்தைப் போற்றிப் புகழ்வோமடி! மாரி பொழிய வயல்திருத்தி தோள் வண்மையினலே பயிர் விளைத்து-இங்கு வாரிக்குவித்த மனவான் இல்வாழ்வின்ப வாழ்வென எண்ணித் துணை புரிவோம்! செந்தமிழ் காட்டின் விழாவினிலே தலை சிறந்த விழா இதைப் போலில்லை-இன்று வந்தவர்க் கெல்லாம் அமுதளித்து காட்டில் வறுமைப் பிணியை நீக்கிடுவோம்! 10-1.43 "சண்ட மாருதம்” (பொங்கல் மலர்) 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/102&oldid=807215" இலிருந்து மீள்விக்கப்பட்டது