பக்கம்:பருவ மழை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கல் வைப்போம்! செங்கதிரோன் இவ்வுலகின் உயர்வுக் கான சிறப்பனைத்தும் செயற்படுத்தும் இயற்கைத் தெய்வம்! துங்கமிகும் அவன் புகழைப் போற்றிப் பாடித் துதிப்பதற்கே புத்தாண்டின் தலைகாளாம் தைத் திங்களிலே மனைபுதுக்கி மாசுநீக்கித் தீஞ்சுவைப்பால் சர்க்கரைப்பச் சரிசி சேர்த்து பொங்கலிட்டுப் பூசித்து வணங்கி யேற்றிப் புத்துணர்ச்சி காணுகின்ருேம் தமிழர் வாழ்வில்! பஞ்சவண்ண ஒளிஜாலம் காட்டும் வானில் படைவரிசை யுத்தகள ரத்தக் காட்டில் குஞ்சரத்தின் கூட்டங்கள் கொக்கரிக்கும் கோபுரங்கள் மாநதிகள் மலைகள் எங்கும் சஞ்சரிக்கும் பயங்கரப்பேய் அரக்கர் கூட்டம் தலையிழந்த முண்டங்கள் எழுந்தே ஆடும் நெஞ்சையள்ளும் கற்பனேசேர் கதைகள் சொல்லும் நிகழ்ச்சி யெலாம் எதிரொலிக்கும் கதிரோன் வாழி! உலகனைத்தும் இரவியெனும் சக்தி யாரம் ஒய்வின்றிச் சுற்றிவரும்; கடலில் மேவும் அலையனத்தும் அவன்புகழை இசைத்துப் பாடும், அழகுமுகிற் காதலினல் மயங்கி யோடும் 88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/103&oldid=807216" இலிருந்து மீள்விக்கப்பட்டது