பக்கம்:பருவ மழை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையெழிலில் தனை மறந்து காற்றுத் தேவன் கைகோர்த்துக் கார்முகில அணைப்பான், ஆங்கே நிலைதவறி வீழ்பவள்போல் மேகப் பெண்ணுள் Iநிலமனைத்தும் மழைமாரி பொழிவாள் வாழி! பயிர்வகைப்புற் பூண்டுசெடி கொடி மரங்கள் பனிமலர்ப்பூங் காவனங்கள் மலைகள் காடு உயர்மனிதன் ஈருக இங்கே வாழும் ஊர்வனவும் பறப்பனவும் விலங்கும் மற்றும் உயிரினங்கள் யாவையுமே தோற்று வித்து உலகனைத்தும் கருணைகொண்டு வாழ வைக்கும் செயற்கரிய சேவை செய்யும் இயற்கைத் தெய்வம் செங்கதிரோன் திறம் வியந்து பொங்கல் வைப்போம்! ஜனவரி-1976. 6 89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/104&oldid=807217" இலிருந்து மீள்விக்கப்பட்டது