பக்கம்:பருவ மழை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கலா பொங்கியது? மங்களம் சேர்க்கும் மாசில்லாத் தைத்திங்கள்! எங்கோ வெகுதூரம் ஏகி விலகிகின்ற செங்கதிரோன் மீண்டும் திரும்பத் தொடங்கும்நாள்! ஆடிமுதல் தைவரைக்கும் அயராது வயல் வெளியில் ஒடி உழைத்த மக்கள் ஓய்வுபெறும் முதல்நாள்! ஆறுதிங்கள் பாடுபட்டு அறுத்தெடுத்த கெல்குவிக்கும் பேறுபெற்ற நற்பயனைப் பேணிக் களித்திடும்நாள்! மங்கையர் மக்கள் மனைத்தலைவர் சுற்றமெல்லாம் பொங்கும் மகிழ்ச்சியுடன் போற்றும் தமிழர்விழா! பூமித்தாய்தந்த புனிதமிகும் நெல் மணிகள் சேமித்து வைத்துச் சிந்தை களித்திடும்நாள்! தெய்வம் விருந்துஒக்கல் தென்புலத்தார் அரசுக்கு மெய்யன் புடன்வழங்கி மிகமகிழ்ச்சி காணும்நாள்! புத்தரிசி குத்திப் புதுப்பானை பொங்கலிட்டுப் பக்தியுடன் செங்கதிர்க்குப் படைத்துக் களிக்கும்நாள்! மாட்டுக்கும் பொங்கல்வைத்து மனிதர் குணத்தின்பண் பாட்டை வளர்த்துவரும் பைந்தமிழர் பொங்கல் விழா! ரத்தத்தை வேர்வையாக்கி கிணத்தையே சேருக்கி வித்திட்டுப் பாடுபட்டு விளைவித்தளிக்கும் ஏழை உழவர்கள் வாழந்தால்தான் உலகில்சுகம் பெறுவோம் உழவனை வாடவிட்டால கலகங்கள் தான்பெருகும், அமைதி அழிந்துவிடும் அரசியல் சீர்குலையும்! 90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/105&oldid=807218" இலிருந்து மீள்விக்கப்பட்டது