பக்கம்:பருவ மழை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயக் கோப்பெல்லாம் தலைகீழாய் மாறிவிடும்! ஆதலினுல் உழவர்களை அலகூழியமாய் எண்ணுதிர் வேதனையால் சொல்லுகின்றேன் விளையாட்டாய் கினையாதீர் அதிகார வர்க்கம்முதல் அரசியல் வாதிவரை சதிகாரர் ஆகிவிட்டால் சமுதாயம் வாழ்ந்திடுமா? சமுதாயக் காவலரே சதிசெய்யத் துணிந்து விட்டால் குமுறுகின்ற ஏழைமக்கள் கும்பி கொதிக்காதா? பதுக்கலுக்கும் கடத்தலுக்கும் பகல்கொள்ளை யடிப்பதற்கும் ஒதுக்கலுக்கும் துணைபோகும் உலுத்தர்களை என்னென்போம்? அரிசிவிலை ரூபாய் ஆறேழு என்றுசொன்னுல் வரிசையாய் பொங்கலிட வக்கேது ஏழையர்க்கு? கூழுக்கும் வழியற்றுக் குமுறி அழுதேங்கும் ஏழைக் குடிசைகளில் எங்ங்ணம் பால் பொங்கும்? பாத்திரங்கள் பொங்கவில்லை. பசிவயிறு பொங்கியது! தோத்திரங்கள் பொங்கவில்லை. துயரம்தான் பொங்கியது ஆத்திரம் பொங்கியது! அவலங்கள் பொங்கியது! நேத்திரங்கள் எல்லாம் நீர் ஊற்றுப் பொங்கியது! வெண்பொங்கல் பொங்கவில்லை, விம்மல்தான் பொங்கியது! புண்பட்ட உள்ளத்தின் பொறுமல்தான் பொங்கியது! நெஞ்சக் குமுறலினல் நெடுமூச்சுப் பொங்கியது! கஞ்சிக்கும் வழியற்ற கலக்கம்தான் பொங்கியது! 'படைப்பு'-பிப்ரவரி-1975 9. 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/106&oldid=807219" இலிருந்து மீள்விக்கப்பட்டது