பக்கம்:பருவ மழை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்ருறவுக் கொள்கைக்கு வாழ்த்து v^^^^0 AASAASAASAASAASAAeMSeMMJJAeSJMAeMAAAS தேசத்தின் செல்வமெல்லாம் திரட்டிக் கொண்டு சிலபேர்கள் சுகமடைய எளியோர் பல்லோர் சுவாசிக்கும் காற்றினையே உணவாய் உண்டு துயருற்று வெயில் மழையில் பணியில் மாயும் காசத்தை வளர்த்து வரும் சமுதா யத்தின் நலங்கெட்ட வழக்கமெல்லாம் மாற்று தற்கு யோசித்துக் கூட்டுறவு இயக்கம் கண்டார்! ஒற்றுமையால் மக்கள் சக்தி உயரும் என்ருர்! 憐 临 費 புனிதமிகுங் கூட்டுறவுக் கொள்கை தன்னைப் புவியனைத்தும் வாழுகின்ற மக்க ளெல்லாம் இனிதுணர்ந்து செயல்புரியத் துணிவா ராயின் இன்னலெல்லாம் கதிரவன்முன் பணிபோல் மாயும்! தனியுடைமைச் சுரண்டல்களும் தகர்ந்தே போகும் சமதருமச் சமுதாயம் மலர்வ தற்கும் கனிசிறந்த மார்க்கமிதே நலமே நல்கும் நமதுரிமைக் கூட்டுறவுக் கழகம் வாழ்க! 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/107&oldid=807220" இலிருந்து மீள்விக்கப்பட்டது