பக்கம்:பருவ மழை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைம்மைக் கொருமை! SMMMMMMMMMMMASJSJSJSJSJSAMMSMJAMMAM MMMMMMMMeMMMMMMMMMMSSMMMMSMMMMMSMMMMMMMMMAMMMAMS காலையொரு காளெனது கண்பனைப் போய்க் காணுதற்குச் சென்றேன், அப் போது நேற்று மாலதிரு மணமான வீட்டில் உள்ளோர் மலைபிளக்கும் பேரிடிபோல் அழுதார், அந்தச் சாலையெலாம் பெருந்திரளாய் மனிதர் கூட்டம் சலிப்போடு இவ்வுலக வாழ்வைப் பற்றி மூலைக்கு காலந்து பேராய் கின்று முணுமுணுத்தார், எனக்கொன்றும் விளங்கவில்லை! நேற்று மணப்பறைமுழங்கக் கேட்டோம் இன்று நிகழ்ந்ததனை அறிந்துகொள்ள என்.உள் ளத்தில் ஊற்றுப்போல் எழுந்தஉணர் வுந்தித் தள்ள ஒடினேன் கான்; கூட்டத்திற் குள்ளே சென்று நாற்றிசையும் பார்த்தேன்.என் நண்பன் ஓர்பால் நலிந்த உள்ளத் தோடுகின்ருன், நடந்த தென்ன? சாற்றிடுக!' எனப்பதைத்தேன்; எனயோர் பக்கம் தனியாக அழைத்துப்போய்க் கதையைச் சொன்னன், வண்டிசைக்கும் கருங் கூந்தல், நிலாமு கத்தில் வளைந்தபுரு வத்தினிடைக் கயற்கண், தங்கம் கொண்டுருக்கி வார்த்தெடுத்த பதுமை யொன்று குதித்தோடும் பாவனையில் வருவாள் போவாள் 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/109&oldid=807222" இலிருந்து மீள்விக்கப்பட்டது