பக்கம்:பருவ மழை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix என்பது அவர் கூற்று. கவிதைபற்றிய அவருடைய இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இந்நூலிலுள்ள கவிதைகள் அமைந்து சிறக்கின்றன. நூல் நவில் பொருள் : நாடும் மொழியும். இலக்கிய இன்பம், சமூகம், இதய எழுச்சி, தெய்வீக நிலையில் அவல அலைகள், பன்மணித்திரள், வாழ்த்துக்கள் என்ற எட்டுப் பகுப்புகளாக நூல் உள்ளது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைப் பரந்து கிடக்கும் தமிழ்நாடும், ஆவியினும் அரிதானதும் ஆதிமுதல் உயர் வானதுமான அமுதத் தமிழும் ஓங்க வேண்டுமென்ற கருத்தை நாடும் மொழியும் என்ற தலைப்பில் எடுத்துரைக் கின்ருர் இலக்கிய இன்பம்' என்ற பகுதியில் தமிழ்ப் பெரும் புலவர்களின் கருத்துக்களைத் தருவதோடு இலக்கியம் சமதர்மப் பாதையை வகுத்துக் காட்டவேண்டுமென்ற வி9ை வையும் வெளிப்படுத்துகிருர், உழவன் வாழ்ந்தால்தான் உலகம் வாழும்; கூட்டுறவுக் கொள்கையே வாழ்வை உயர்த்தும்; பெண் விடுதலை வேண்டும்; பெண்கொள்ள விலை கேட்கும் பேடிச் செயல் ஒழிய வேண்டும்; வேண்டாத பழமையகன்று தெளிந்த புதுமை நுழையவேண்டும்; மதுக் குடியை அகற்ற வேண்டும்; பாழடைந்துவரும் இற்றைச் சமுதாயத்தில் இழந்துவிட்ட பண்பாட்டை மீட்க வேண்டும் என்ற கவிக்குரலைச் சமூகம்’ என்ற பகுதியில் கேட்கிருேம். பகைவர்கள் நம் நாட்டை எந்த வகையிலும் பயன்படுத்த இடம் தந்திடக்கூடாது; இல்லையென்ற கொடுமையை இல்லாதொழிக்கும் பொதுவுடைமை நாட்டில் தோன்ற வேண்டும்; காந்தியத் தத்துவம் உலகெங்கும் மலர வேண்டும் என்பது கவிஞருடைய இதய எழுச்சி'யாகத் திகழ்கிறது: ‘தெய்வீக நினைவில் அழுந்தும் கவிஞர் ஆலயங்கள் அறம் வளர்க்கும் இல்லங்களாகத் திகழவேண்டும் என விழைகிரு.ர். தன் மைந்தன் அசோகனை இழந்த வருத்தமும் அரு ளாளர்கள், தேசபக்தர்கள், அரசியல் மேதைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/11&oldid=807223" இலிருந்து மீள்விக்கப்பட்டது