பக்கம்:பருவ மழை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவெல்லாம் உறக்கமின்றிப் பெண்ணைப் பெற்றேர் ஏக்கமுற்ருர், உறவினர்கள் ஆலோ சித்துத் திருமணமாப் பிள்ளையுடல் நலத்தைப் பார்த்துச் செய்வதுதான் முறையென்ருர், பிள்ளை வீட்டார் வருமானம் போய்விடுமென் றெண்ணி, என்ன வழக்கமிது வைத்துள்ள மணத்தை மாற்றல்? சரியில்லை, குறித்தபடி மணம்செய் தல்தான் தக்கசெயல் விதியினையார் தடுப்பா ரென்ருர் திருத்தெய்வத் தூதரெனச் சொல்லி இந்தத் தேசத்தோர் உழைப்பில்வரும் செல்வ மெல்லாம் பறித்துண்டே உடல் கொழுக்கும் கரையா னை பகற்கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த நான்குக் குருக்களுமோர் சாதகரும் குறிசொல் வோரும் குறைவொன்றும் வாராது இருவருக்கும் பொருத்த மெல்லாம் நிறைந்திருக்கும் இந் நாள் போன்ற புனிதநாள் மற்ருென்று வாய்க்கா தென்ருர். பணம்பறிக்கும் கூட்டத்தார் சொல்லைக் கேட்டுப் பகுத்தறிவை இழந்துவிட்டார், பெண்ணைப் பெற்றேர்! உணர்வுகினை வில்லாத மாப்பிள் அளயை ஒன்பதுபேர் பிடித்துமெள்ளத் தூக்கி வந்து 96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/111&oldid=807225" இலிருந்து மீள்விக்கப்பட்டது