பக்கம்:பருவ மழை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாணயத்தின் மதிப்பினையும் குறைய வைத்தாய்! நாடாளும் அரசியலார் செயலிற் பேச்சில் நாணயமே இல்லாமல் கலிய வைத்தாய்! நல்லவர்தம் உள்ளமெல்லாம் கோக வைத்தாய் ஆணவமும் பிற்போக்குத் தனமும் மேவும் ஆட்சியில்ை வாழ்ந்தோரை வாழ வைத்தாய்! ஊணின்றி ஏழைமக்கள் வாட வைத்தாய்! உள்நாட்டுக் குழப்பத்தைத் தோற்று வித்தாய்! பெருமழையால் ஒருபக்கம் பஞ்சம்! வானம் பெய்யாமற் காய்ந்ததனுல் பஞ்சம் மற்றும் வரிப்புலிபோல் அடுத்தடுத்துச் சீறி வந்த வரைகடந்த புயல்களில்ை சேதம் மேலும் அரசியலார் தேக்கிவைக்கும் உண்வுப் பண்டம் அவிந்தழியும் காசத்தால் பஞ்சம் எங்கும் சரசவிலை தனைத்தடுக்கக் கள்ளச் சந்தைச் சதிகாரர் கொடுமையில்ை தணியாப் பஞ்சம்! வீணுன புரட்சித்தீ மூள வைத்தாய் விபரீத விரயங்கள் நேர வைத்தாய்! வானூர்தி விபத்துக்கள் நிகழ வைத்தாய்! வரைகடந்த ரயில் விபத்துப் பலவி 8ளத்தாய்! காணுத அதிசயமாய்த் துறவு பூண்டோர் கச்சைகட்டி உண்ணுகோன் பிருக்க வைத்தாய்! ஆலுைம் உன்னுட்சி முடியக் கண்டோம். அடுத்துவரும் புத்தாண்டில் மகிழ்ச்சி காண் போம்! 100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/115&oldid=807229" இலிருந்து மீள்விக்கப்பட்டது