பக்கம்:பருவ மழை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிண்ணத்தை ஏந்தாதே ! AMAMAAAASASASSMSSSMSSSMASJMMAMSMAAASAASAASAASAASAAASMSMAAAS கிண்ணத்தை ஏந்தாதே-கெட்ட எண்ணத்தில் நீந்தாதே-மதுக்- (கிண்) எண்ணும் எழுத்தும் இலக்கியத் தேர்ச்சியும் மண்ணிற் புதைக்காதே-கவி வண்ணஞ் சிதைக்காதே-உன் கண்ணுங் கருத்துங் கடைவழியில் விட்டுக் காலங் கழிக்காதே-அலங் கோலஞ் சுழிக்காதே-மதுக்- (கிண்) தனிமனிதன் செய்யுந் தவற்றினையே பொது தர்மங்க ளாக்காதே-அ தர்மங்கள் சேர்க்காதே-வாழ்வின் புனித நீதிநெறி அறம்வளர்த் தோர்களின் போதத்தைத் தள்ளாதே-அப வாதத்தைக் கொள்ளாதே-மதுக்- (கிண்) மாதர்கள் யாவருங் காதற் பொருளென்று மருவ நினைக்காதே-கற்பின் பெருமை யழிக்காதே--குடி 102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/117&oldid=807231" இலிருந்து மீள்விக்கப்பட்டது