பக்கம்:பருவ மழை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டையகாள் மக்கள்தங்கள் இடத்தில் உள்ள பண்டத்தைப் பிறர்க்குதவித் தமக்கு வேண்டும் பண்டத்தைப் பெற்றுவரும் பழக்கத் தைத்தான் பண்ட மாற்றுப் பணய மென்று சொல்லு வார்கள்! பண்டமாற்றுப் பணயமென்ற சொல்லே இன்று பணம்என்ற பெயராலே வழங்கி எங்கும் பண்டங்கள் கொள்வதற்கும் கொடுப்ப தற்கும் பயன்படுத்தும் எளிதான கருவி யாகும்! எல்லோரும் எளிதாகப் பயன்படுத்தும் ஏற்றதொரு கருவியென நினைக்கும் அந்தப் பொல்லாத பனம்படுத்தும் பாட்டை எண்ணிப் புலம்பாத அப்பாவி மனித னில்லை! கல்லோர்பால் பணம்என்றும் சேர்வ தில்லை! நாகயமில் லாதவர்க்குப் பஞ்ச மில்லை! கொல்லாமல் கொல்லுகின்ற நஞ்சைப் போலே கொடுக்குமதன் தொல்லைகளுக் களவே யில்லை! பணமில்லான் பிணத்திற்குச் சமான மென்றும் பணமென்ருல் பினமும் வாய் திறக்கும் என்றும் பனம்பந்தி தனில்குணம்குப் பையிலே என்றும் பணம்பத்தும் செய்யுமென்றும் சொல்வ தெல்லாம் முனம்கண்டோர் அனுபவத்தின் முயற்சி யன்ருே? முத்தோர்சொல் முதுரைகள் அமுத மன்ருே? பணம் படைத்தோர் எல்லாமே படைத்துக் கொள்வார்! பஞ்சைகளோ பணத்தைஎண்ணி இளைத்துத் தேய்வார்! 1 07

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/122&oldid=807237" இலிருந்து மீள்விக்கப்பட்டது