பக்கம்:பருவ மழை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரைகடல்ஒ டியும்திரவி யங்கள் தன்னைச் சேர்த்திடுவீர் என்றுமுன்பு மக்களுக்குப் பரிவுடனே அறிவுரைகள் சொன்ன ஒளவைப் பாட்டியவள் சொற்படியே இன்று நாட்டில் வரைகடந்த கொள்ளையர்கள், கடத்தல் காரர், வரியேய்ப் போர், பதுக்கிவைப்போர், கருப்புச் சந்தை பெருக்கிடுவோர், கையூட்டர், கணக்கில் சேராப் பெரும்பணத்தை மறைப்போரே பெரியோ ரானுர்! இத்தகைய கொடியவர்தம் செயலால் நாட்டில் இழையோடும் சமுதாயப் பொருளாதாரம் மெத்தவுமே தலைகீழாய் மாறிப் போச்சு! மேன்மையெல்லாம் அன்னவர்க்கே உரிய தாச்சு! பத்திரிகை நீதிமன்றம் சட்டம் எல்லாம் பகற்கொள்ளைக் கரரர்களின் பக்கம் என்ருல் உத்தமர்கள், விவசாயத் தொழிலாளர்கள், உழைப்பாளர் வாழ்வதற்கு வகைதான் ஏது? பணத்தால்தான் பதவிகளைப் பிடிக்கின் ருர்கள்! பதவியில்ை பணக்கொள்ளை அடிக்கின் ருர்கள்! குணத்தாலோ கொள்கையாலோ இனிமே லிங்கே குறிக்கோளில் உயர்ந்தஒரு அரசைக் காண கினைத்தாலும் நடக்காத நிலைமை தன்னை கித்தம் கித்தம் காணுகின்ருேம் எனினும் மக்கள் மனத்தாலே உணர்ச்சியற்று முடுக்கி விட்ட மரப்பொம்மை போல்உழன்று வாழ்கின் ருர்கள். 108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/123&oldid=807238" இலிருந்து மீள்விக்கப்பட்டது