பக்கம்:பருவ மழை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பால்தான் வளம்பெருகும் என்று கித்தம் உரைக்கின்ருர் பதவி பெற்று உயர்ந்தோ ரெல்லாம்! உழைப்பவர்க்கு உபதேசம் செய்வோ ரெல்லாம் உழைக்காமல் பயனடைதல் கொடுமை யன்ருே? உழைப்பில்வரும் பயன்கருப்புப் பணமாய் மாறி உள்ளுக்குள் எங்கெங்கோ புதைந்து போல்ைசெழிப்பாக வங்கியெல்லாம் வளர்ந்தி டாது! தேசத்தில் தொழில்வளங்கள் பெருகி டாது ஒருமனிதன் தனக்கொன்ருல் தூக்கு என்ருல் ஊர்மக்கள் அனைவரையும் கொல்லு கின்ற திருடர்கள்பால் ஏன்இரக்கம் காட்ட வேண்டும்: தெருவிளக்குத் தூண்களெல்லாம் தூக்குப் போடும் மரங்களென மாற்றிவைத்து வரிசை யாக மரணதண் டனேவிதித்துத் தொங்க விட்டுக் கருவறுக்க வேண்டும் கள்ளக் கடத்தல் மற்றும் கருஞ்சந்தைப் பதுக்கல்செயும் கயவர் தம்மை! இத்தகைய கொடுமையெல்லாம் வளர்வதற்கு இவர்கள்மட்டும் பொறுப்பல்ல; இதனைக் கண்டும் மெத்தனமாய் இருக்கும்.அதி கார வர்க்கம் மேல்வருமானம்எனக்கை யூட்டுக் கொள்வோர், 'சத்தியமே வஜெயதே' எனும்சொற் கொண்டு சர்க்காரை கடத்துகின்ற புள்ளி யெல்லாம் குத்தகையாய்ப் பெற்றுவரும் கணக்கை ஆய்ந்து குற்றவாளிக் கூண்டிலேற்றும் துணிவு வேண்டும்! 109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/124&oldid=807239" இலிருந்து மீள்விக்கப்பட்டது