பக்கம்:பருவ மழை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi பழுத்துளம் உவந்தோசை உற்றுவரல் வேண்டும் படிக்கும் இசைகூடல் வேண்டும் பாங்காக இன்னவை பொருந்திடச் சொற்கவிதை பாடிற் சிறப்பென்பர்காண்” எனக் குமரேச சதகம் பாவிற்குச் சிறப்புக் கூறியவாறு இந் நூலிலுள்ள கவிதைகள் இனிய சொற்களையும், அரிய கருத் துக்களையும், பொருந்திய யாப்பினையும் பெற்ற மரபுக் கவிதைகளாகத் திகழ்வது கவிஞரின் தெளிந்த புலமையை வெளிப்படுத்துகின்றது. ஒசை நயம் : வெற்றி வெற்றி வெற்றியென்று வெற்றிமுரசு கொட்டடா விடுதலைக்குத் திடமுடன் எதிர்த்துக் கச்சை கட்டடா (பக்.58) போன்ற அடிகள் ஒசை நயம் சிறந்தவையாய்த் திகழ் கின்றன. கற்பனை நயம் : முகிற் காதலியின் அழகில் மயங்கிக் காற்றுத் தேவன் அணேந்ததால் பிறந்த இனிய குழந்தையே மழை என்பது நயமான கற்பனையாகும். அக் கருத்தமைந்த பாடலடிகள் வருமாறு: அழகுமுகிற் காதலில்ை மயங்கி யோடும் கலையெழிலில் தனை மறந்து காற்றுத் தேவன் கைகோர்த்துக் கார்முகில அணைப்பான்; அங்கே நிலைதவறி வீழ்பவள் போல் மேகப் பெண்ணுள் நிலமனைத்தும் மழைமாரிப் பொழிவாள் வாழி (பக். 89)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/13&oldid=807245" இலிருந்து மீள்விக்கப்பட்டது