பக்கம்:பருவ மழை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புக்கே ஒப்பந்தம் பேசு வோன்போல் ஒருவார இடைவெளிக்குள் சூழ்ச்சி செய்து கப்பல்களில் போர்ப்படையை வரவ ழைத்துக் கருணையின்றிக் கனல்மாரிக் குண்டைப் பெய்து அப்பாவிப் பொதுமக்கள் பெண்டு பிள்ளை அனைவரையும் பூண்டோடு அழிக்கும் கோரம் இப்பாரில் எப்போதும் யாரும் காணு இரக்கமற்ற செயல்,இதுவா உள்காட் டுப்போர்? பிள்ளைகளைப் பறிகொடுத்துப் புலம்பும் தாயும் பெற்ருேரை இழந்துகின்று ஏங்கும் சேயும் துள்ளிவரும் குண்டுபட்டுக் கணவன் வீழத் துடிதுடித்துக் கதறியழும் பெண்கள் கற்பைக் கொள்ளையிட்டுக் கொக்கரித்துத் துய்க்கும்-காமக் கொடுமைதன்னை அடுத்தடுத்துக் காதிற் கேட்டும் உள்ளமின்னும் எரிமலையாய் வெடித்தெ ழாமல் உலகத்தோர் வேடிக்கை பார்ப்ப தென்ன? கேற்றுவரை பாரதமும் பாகிஸ் தானும் நிச்சயமாய் ஒர்குடும்ப மாக வாழ்ந்தோம்! மாற்றுரைத்துப் பார்த்தாலும் இருவர்க் குள்ளும் மருவுகின்ற உறவைரத்த பாசம் காட்டும்! வேற்ருெருகா டெனப்பிரிந்து போய்விட் டாலும் வெகுகால பந்தம்கம்மை விட்டா போகும்? ஆற்றவொண்ணு அடக்குமுறைக் காட்பட் டோர்க்கு ஆதரவு நல்குவதே மனிதப் பண்பாம்! | 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/133&oldid=807252" இலிருந்து மீள்விக்கப்பட்டது