பக்கம்:பருவ மழை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னலமும் மதவெறியும் மிருகப் பண்புசும் தடம்புரளும் நடைமுறையும் வகுத்துக் கொண்டு முன்னர் பாகிஸ்தானத்தில் அயூப்கான் செய்த முடிவுகளும் முடிவிலவன் பட்ட பாடும் சின்னமதிச் சீன ஒற்றன் பூட்டோ காட்டும் தீநெறியா லுண்மைதன்னைத் தேர்ந்தி டாதான் இன்னலுறும் அழிவினையே தேடிக் கொண் டான்! இறுதிவெற்றி கிழக்குவங்க வீரர் கட்கே மக்களினப் படுகொலையை மேலும் மேலும் வளர்த்துவரும் கொடுஞ்செயலைத் தடுத்தி டாது வக்கணைகள் பேசுவதேன்? வங்க மக்கள் வடிக்கின்ற கண்ணிரைத் துடைப்ப தற்குத் தக்கதொரு மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்துத் தடுத்தெதிர்த்துப் பாகிஸ்தான் ஆண வத்தை இக்கணமே எழுச்சிகொண்டு அடக்க வேண்டும்! இந்தியாவே இப்பொறுப்பை யேற்க வேண்டும்! 8 12 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/135&oldid=807257" இலிருந்து மீள்விக்கப்பட்டது