பக்கம்:பருவ மழை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii தமிழன்னையே தமிழ்க் கொடியாக வீற்றிருக்கிருள் என்ற கற்பனையும் நயமாக இருக்கிறது. அன்னையின் விழிப் புருவம் வில்; அருள் விழி மீன்; அவளுடைய வீரமோ புலி, அன்னையின் நுதலோர் சிலைவடிவாகவும் அன்னே அருள்விழியோர் சேல்வடிவாகவும் அன்னையின் வீரமோர் புலிவடிவாகவும் அன்னை கண்ணுெளி இளங் கதிரவனுகவும் -தோன்றுது பார் தமிழா (பக். 13) உவமை நயம் : சிறந்த கவிஞர்களாலேயே பொருந்திய உவமைகளைப் படைத்து அழகு கூட்ட முடியும். இந் நூலுள் பல சிறந்த உவமைகள் அங்காங்கே சுவையூட்டுகின்றன. சான்றுக்குச் சில தரப்படுகின்றன: மிரட்சியினுல் குக்கல்பல குரைத்தால்-யானை மிடுக்குகடை விட்டவற்றைத் தொடர்ந்தா சீறும்? (பக் 165) நாய்கள் குரைக்கின்றன என்பதற்காகவா யானை அவற்றைச் சீறும்? தமிழுக்குத் தேவநாகரி லிபியைப் பயன்படுத்த வேண்டும் என்றபோது அது, குயிலுடன் கோட்டானைக் கூட்டி வைப்பதைப் போலே குமரியைக் கிழவன் மணம் முடிப்பதைப் போலே வயிரத்தைப் பித்தளையில் வைத்திழைப்பதைப் போலே (பக். 270) ஆகும் என்று உவமையாலேயே தம் மறுப்பைத் தெரிவித் திருப்பது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/14&oldid=807267" இலிருந்து மீள்விக்கப்பட்டது