பக்கம்:பருவ மழை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகத்தின் யுத்ததர்ம முறையை விட்டு ஊருக்குள் மக்கள்கூடும் இடங்களெல்லாம் பலம்மிக்கக் குண்டுகளைத் தொடர்ந்து வீசி பாரதத்தின் மக்கள் உயிர் பறிக்கும் வஞ்சக் கொலைகாரக் கொடுமனத்தான் அயூப்கான் செய்த கொடுமைகட்குச் சிகரமெனும் கொடுமை யம்மா! பலவந்த ராய் மேத்தா மரணச் செய்தி பாரில் கல்லோர்உள்ள மெல்லாம்பதைக்கும் செந்தி! அல்லாவைப் பள்ளியிலே முஸ்லிம் மக்கள் அஞ்சலிக்கும் வேளையிலே குண்டைப் போட்டான்! எல்லோர்க்கும் அன்புளத்தால் இரக்கம் காட்டும் ஏசுபிரான் ஆலயத்தைத் தகர்த்துத் தீர்த்தான் பொல்லாத நோய்க் கொடுமை தீர்க்கும் தூய புனித மருத்துவமனைக்கும் வெடிகள் வைத்தான்! சொல்லரிய தியாகி.பலவந்த்ராய் மேத்தா துணைவியொடு பலர்உயிரைக் குடித்தான் பாவி விடுதலைப்போர்க் களத்தினிலே ஆர்வ மிக்க வீரமிகு சிப்பாய்போல் குதித்து அன்று அடிமையிருள் தளையகற்றப் பாடு பட்டு அல்லல்களைப் பரிசாக ஏற்றுக் கொண்டு கொடுமைகளைச் சகித்துகின்ற குணக்குன் ருகும் கொள்கைகளில் கடுகளவும் மாற்ற மில்லா நடு நிலையா ளன்பலவந்த் ராய்மேத் தாவை காடுபுகழ் கல்லவனே இழந்தாள் அன்னே! 126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/140&oldid=807268" இலிருந்து மீள்விக்கப்பட்டது